கம்ப்யூட்டர்மயமாகிறது கோவை பதிவு அலுவலகங்கள்

Subscribe to Oneindia Tamil

கோவை:

கோவையில் ரூ. 130 கோடி செலவில் கம்பெனிகளின் பதிவு அலுவலகம்கம்ப்யூட்டர்மயமாக்கப்பட்டு செயல்படவுள்ளது என கம்பெனிகளின் பதிவுத் துறைச்செயலர் ராமசாமி தெரிவித்தார்.

கோவை பங்குச் சந்தைக் கட்டடத்தில், வியாழக்கிழமை கம்பெனிகளின் பதிவுஅலுவலகம் திறக்கப்பட்டது. இந்தப் பதிவு அலுவலகத்தை மத்திய சட்டத்துறை மற்றும்கம்பெனிகளின் விவகாரத்துறை அமைச்சர் அருண்ஜெட்லி திறந்து வைத்தார்.

விழாவிற்கு கோவை தொழில் வர்த்தகசபையின் உறுப்பினர் கே.ஜி.,பாலகிருஷ்ணன்வரவேற்ற்புரை நிகழ்தினார். கொடீசியா தலைவர் வரதராஜன், மாவட்ட கலெக்டர்சந்தானம், மத்திய கம்பெனிகள் பதிவுத் துறை இணைச் செயலர் சஞ்சீவ் ரெட்டிஆகியோர் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில், கம்பெனிகளின் பதிவுத் துறைச் செயலர் ராமசாமி பேசியதாவது:

கோவை பங்குச் சந்தைக் கட்டடத்தில், அமைக்கப்பட்டுள்ள பதிவு அலுவலகம்முற்றிலும் கம்ப்யூட்டர்மயமாக்கப்பட்டு செயல்படவுள்ளது. இதன் மூலம்கம்பெனிகளைப் பதிவு செய்ய ஏற்படும் கால தாமதத்தைத் தவிர்க்க இயலும். மேலும்,ஒரு வெளிப்படையான அணுமுறைகளைப் பதிவு அலுவலகங்கள் கொண்டிருக்கும்.இதற்காக ரூ. 130 கோடி ரூபாய் செலவிடப்படும்.

தகவல் தொழில்நுட்ப சட்டம் அமலுக்கு வரும்போது இந்தப் பதிவு அலுவலகம்முற்றிலுமாக "ஆன்லைன் முறையில் செயல்படும். இது இரண்டாவது கட்டநடவடிக்கையாக மேற்கொள்ளப்படுகிறது.

கோவையில் கம்பெனிகளின் பதிவு அலுவலகம் கடந்த 1989-ம் ஆண்டுசெயல்பட்டபோது 2 ஆயிரத்து 500 கம்பெனிகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.தற்போது இதில், 17 ஆயிரம் கம்பெனிகள் பதிவு செய்யப்பட்டு செயல்பட்டு வருகிறதுஎன்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+