நீதிமன்றத்திடம் ரகசிய தகவல்களை சமர்பிக்க கர்நாடகம் முடிவு

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

வீரப்பனைப் பிடிக்க கர்நாடகம் எடுத்த போலீஸ் நடவடிக்கைகள், ரகசிய நடவடிக்கைகள் குறித்து உச்சநீதிமன்றத்துக்கு சீலிடப்பட்ட கவரில் விவரங்கள் அனுப்ப அரசு முடிவு செய்துள்ளது.

வீரப்பனின் கோரிக்கையை ஏற்று தடா கைதிகளை விடுவிக்க கர்நாடகம் முயல்வதற்கு உச்ச நீதிமன்றம் கடும்கண்டனம் தெரிவித்துள்ளது. வீரப்பனைப் பிடிக்க கர்நாடகம் தவறிவிட்டதாகவும் நீதிபதிகள் கூறினர்.

இதையடுத்து வீரப்பனைப் பிடிகக என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன எனற விவரத்தை நீதிமன்றத்திடம்சமர்பிப்பதாக கர்நாடக அரசின் வழக்கறிஞர் கூறினார்.

இப்போதுள்ள சூழ்நிலையில் இந்த விவரங்களை நீதிமன்றத்தில் வெளிப்படையாகக் கூறினால், அது ராஜ்குமார்விடுதலையில் பிரச்சனை உருவாக்கும் என்பதால் இந்த விவரங்களை சீல் இடப்பட்ட கவரில் போட்டு நீதிபதிகளின்பார்வைக்கு மட்டும் சமர்பிப்பதாக கர்நாடகம் கூறியது. இதை நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டுவிட்டது.

இந் நிலையில் முதல்வர் கிருஷ்ணா தலைமையில் உயர் மட்டக் கமிட்டிக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடந்தது.அதில், நீதிபதிகள் கோரிய விவரங்களை 16ம் தேதிக்குள் அனுப்பி வைப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+