வீரப்பனை சந்திக்க காட்டுக்குள் சென்றார் விடுதலைப் புலிகளின் வக்கீல்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
வீரப்பனைச் சந்திக்க காட்டுக்குள் சென்றுள்ள பழ. நெடுமாறன் தலைமையிலான தூதுக்குழுவில் மேலும் ஒருவர் இணைந்துள்ளார்.
மதுரையைச் சேர்ந்த இந்தத் தூதரின் பெயர் சந்திரசேகரன். வழக்கறிஞராக இருக்கிறார்.நெடுமாறனுக்கு மிகவும் வேண்டியவர். விடுதலைப் புலிகள் சம்பந்தமான சிலவழக்குகளில் அவர்களுக்காக ஆஜராகி வருகிறார்.
நாகர்கோவில் நீதிமன்றத்தில், விடுதலைப் புலிகளுக்கு விதிக்கப்பட்ட தடைதொடர்பான வழக்கில் ஆஜரான சந்திரசேகரன், நெடுமாறனிடமிருந்து வந்தஅழைப்பை ஏற்று காட்டுக்கு விரைந்துள்ளார்.
தற்போது நெடுமாறன் தலைமையிலான குழு, சத்தியமங்கலம் காட்டுப் பகுதிக்குள்உள்ளனர். அங்கு தொடர்ந்து மழை பெய்து வருவதால், மீட்பு முயற்சிகள்தாமதமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications