9-வது மாடியிலிருந்து விழுந்தும் உயிர் பிழைத்த பெண்

Subscribe to Oneindia Tamil

சிங்கப்பூர்:

சிங்கப்பூரில் உள்ள அடுக்கு மாடிக் கட்டடத்திலுள்ள ஜன்னல் வழியாக தவறி விழுந்தபணிப்பெண் படுகாயமடைந்தார்.

சிங்கப்பூரில் உள்ள 16 மாடிக் கட்டிடத்தில், 9-வது மாடியில் உள்ள வீட்டில் ருமாணி(21) என்ற இந்தோனேஷியப் வேலை பார்த்து வந்தார். வீட்டின் ஜன்னலை சுத்தம்செய்யும் போது, ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து கீழே விழுந்தார். தலையில் பலத்தகாயம் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதே சமயத்தில் அதே கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் பணிபுரியும் மற்றொருஇந்தோனேஷிய பணிப்பெண் சிட்டி லேலி டால்வியார்கோ (26) கடை வீதியிலிருந்துதிரும்பி வந்து கொணடிருந்தார். இவர் மீது கண்ணாடித் துண்டுகள் விழுந்ததால்இவருக்கும் காயம் ஏற்பட்டது.

ருமாணி பணிபுரியும் வீட்டின் உரிமையாளர் லீ வீ லெங் இதுகுறித்துக் கூறுகையில்,ருமாணி அந்த அறையில் என்ன செய்து கொண்டிருந்தார் எனத் தெரியாது. நான் எனதுஅறையில் என் இரு குழந்தைகளுடன் இருந்தேன். நான் அவரை ஜன்னலைச்சுத்தப்படுத்துமாறு கூறவில்லை என்றார்.

அவரது மனைவியும், நான் அலறல் சத்தம் கேட்டேன். ஆனால் அது ருமாணியுடையதுஎன்பது என்குத் தெரியாது. செக்யூரிட்டி வந்து ருமாணி கீழே விழுந்து விட்டதாககூறிய பிறகுதான் எனக்கு விஷயம் தெரியும். நானும் அவரை ஜன்னலைதுடைக்கும்படி கூறவில்லை என்றார்.

அந்த கட்டிடத்தில் வசிப்பவர்கள் கூறுகையில், கீழே விழுந்த ருமாணியின் அலறல்சத்தம் கேட்டும், கண்ணாடி உடையும் சத்தம் கேட்டும் நாங்கள் வந்து பார்த்தோம்.அப்போது ருமாணியும், சிட்டியும் அரை மயக்க நிலையில் இருந்தனர் என்றனர்.

போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சிங்கப்பூரில் இதுபோல் வெளிநாட்டுப் பணிப்பெண்கள் ஜன்னலை சுத்தம் செய்யும் போதோ அல்லதுஆபத்தான பணிகள் செய்யும் போது விபத்துக்குள்ளாகி காயமடைவதும், இறப்பதும்அடிக்கடி நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+