ஒரு காதல் .. ஒரு கொலை ..8 மாதக் குழந்தை அநாதை

Subscribe to Oneindia Tamil

ஈரோடு:

கள்ளக்காதலைக் கண்டித்து தாயைக் கொன்றான் மகன். இக்காதலில் பிறந்த 8 மாதக்குழந்தை அனாதையானது. இந்த சோக சம்பவம் ஈரோடு மாவட்டத்தில் நடந்துள்ளது.

ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள சிறுவலூர் காமராஜ் நகரைச் சேர்ந்தவர்பழனிச்சாமி. இவருக்கும் இதே பகுதியைச் சேர்ந்த அலமேலு என்பவருக்கும்திருமணம் நடந்தது. இருவருக்கும் மூன்று குழந்தைகள் பிறந்தனர்.

ஜனகரத்தினம், சரவணக்குமார், நாகராஜ் என்ற இந்த மூன்று பேரும் குழந்தைகளாகஇருந்தபோது பழனிச்சாமி இறந்து போனார்.

அனாதையான அலமேலு செய்வதறியாமல் திகைத்தார். அழுது புலம்பினார்.

உறவினர்கள் கைவிட்ட நிலையில், தனி மரமாக நின்ற அலமேலுவுக்கு அந்தப்பகுதியில் உள்ள ஒரு வாலிபர் கைகொடுத்தார். குழந்தைகளை வளர்க்கத் தேவையானஉதவிகளைச் செய்தார். கைகொடுத்த வாலிபருடன் அலமேலுவுக்குக் காதல்அரும்பியது. இந்தக் காதல், நெருக்கமடைந்தது. நாட்கள் கடந்து சென்றன. குழந்தைகள்வளர்ந்தனர்.

ஜனகரத்தினத்திற்கு 17 வயதானது. சரவணக்குமார் 10 வயதைத் தொட்டான்.நாகராஜுக்கு 7 வயதானது. இந்த நிலையில் தான் எதிர்பாராதவிதமாக அலமேலுவுக்குமற்றொரு ஆண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தை பிறந்ததும், அலமேலுவின் காதல்அம்பலமானது.

ஊரார்கள் ஒரு விதமாகப் பேச, வளர்ந்து விட்ட மகனுக்கு அவமானம் பிடுங்கித்தின்றது. தாய் மீது ஆத்திரம் கொண்டான் ஜனகரத்தினம். தாயைக் கண்டித்தான். இதில்இருவருக்கும் தகராறு ஏற்பட்டு வந்தது. தன் இஷ்டப்படி தான் நடப்பேன் எனஅலமேலு அடம் பிடித்தார். ஆத்திரமடைந்தான் ஜனகரத்தினம்.

நீண்ட நாள் நீடித்து வந்த இந்த காதலுக்கு முடிவு ஏற்படவில்லை. இந்த நிலையில்,ஜனகரத்தினத்திற்கும், அலமேலுவுக்கும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரத்தில், ரப்பர்கட்டை ஒன்றை எடுத்து தாயை ஆத்திரம் தீர அடித்தான் ஜனகராஜ். பலத்தகாயமடைந்த அலமேலு, சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் 8 மாதக்குழந்தையுடன் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அலமேலு இறந்து போனார். 8 மாத பச்சிளம்குழந்தை அனாதையானது. இந்த குழந்தைக்கு இரக்கப்பட்டு மருத்துவமனை சிறிதுநாட்கள் ஆறுதல் அளித்தது. ஆனால், தொடர்ந்து இக் குழந்தையை பராமரிக்கஇயலாத மருத்துவமனை கோவையில் உள்ள ஒரு விடுதியில் சேர்க்க முடிவுசெய்துள்ளது.

வழக்குப் பதிவு செய்த போலீசார் தாயைக் கொன்ற மகனைத் தேடி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+