ஆட்சி அமைத்தது சந்திரிகா கட்சி

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

அதிபர் சந்திரிகாவின் மக்கள் கூட்டணி இலங்கையில் புதிய ஆட்சியைஅமைத்துள்ளது. முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தனது தேர்தல்தோல்வியை ஒப்புக் கொண்டுள்ளது.

மக்கள் கூட்டணியைச் சேர்ந்த ரத்னஸ்ரீ விக்கிரமநாயகே புதிய பிரதமரமாகபதவியேற்றுக் கொண்டார். அவருக்கு அதிபர் சந்திரிகா குமாரதுங்கா பதவிப்பிரமானம் செய்து வைத்தார். சந்திரிகாவின் இல்லம் உள்ள டெம்பிள் ட்ரீஸ் பகுதியில்பதவியேற்பு விழா நடந்தது.

விக்கிரமநாயகேவுடன் அமைச்சர்கள் யாரும் பதவியேற்கவில்லை. அவர் மட்டுமேபதவியேற்றார். ஏற்கனவே பிரதமர் பதவியில் இருந்து வரும் விக்கிரமநாயகேவுக்கு 67வயதாகிறது.

கடந்த ஆகஸ்ட் 10-ம் தேதி இலங்கை பிரதமரானார் விக்கிரமநாயகே. அதுவரைஸ்ரீமாவோ பண்டாரநாயகே பிரதமராக இருந்தார். அவர் பதவி விலகியவுடன்விக்கிரமநாயகே பிரதமர் ஆனார்.

நாடாளுமன்றத்தில் 107 இடங்களைப் பெற்றுள்ள சந்திரிகா கூட்டணிக்குபெரும்பான்மை பலம் இல்லை. இந்த நிலையில், சந்திரிகா கூட்டணியை ஆதரிக்கதேசிய ஐக்கிய கூட்டணித்தலைவர் அஷ்ரப், ஈழம் மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகியவைமுன்வந்துள்ளன. இக்கட்சிகளுக்கு மொத்தம் 9 எம்.பிக்கள் உள்ளனர். இதன் மூலம்மக்கள் கூட்டணிக்கு பெரும்பான்மை பலம் கிடைத்தது.

இருப்பினும் அரசுக்கு ஆதரவு அளிக்க மக்கள் கூட்டணிக்கு பல நிபந்தனைகளைவிதித்துள்ளது இந்த முன்னணி. முன்னதாக அரசு அழைக்க வருமாறு தனது கட்சியைஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+