பிரிவினை சக்திகளுக்கு அரசுஆதரவு .. சங்கரய்யா புகார்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

நடிகர் ராஜ்குமாரை விடுவிக்க விடுதலைப்புலிகளின் ஆதரவாளரான நெடுமாறனைஅனுப்பியதன் மூலம் தமிழ்நாட்டில் பிரிவினை சக்திகள் காலூன்ற தமிழக அரசுஅனுமதித்து விட்டது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் சங்கரய்யாகுற்றம் சாட்டியுள்ளார்.

சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்த சங்கரய்யா, கன்னட நடிகர் ராஜ்குமாரைவீரப்பனிடமிருந்து மீட்க இரு மாநில அரசுகள் எடுத்துவரும் நடவடிக்கைகளைஆதரித்து வருகிறோம்.

ஆனால் விடுதலைப்புலிகள் ஆதரவாளரான நெடுமாறனை தூதராக அனுப்பியதன்மூலம் தமிழ்நாட்டில் பிரிவினை சக்திகள் காலூன்ற தி.மு.க அரசு அனுமதித்துவிட்டது.இதை ஏற்க முடியாது.

டான்சி வழக்கில் ஜெயலலிதாவுக்கு தனி நீதிமன்றம் அளித்த தீர்ப்பு இறுதியானதுஅல்ல. உயர், உச்ச நீதிமன்ற தீர்ப்புகளே இறுதியானது. நாங்கள் எப்பொழுதும்ஊழலுக்கு எதிரானவர்கள். சட்டம் தன் கடமையைச் செய்யும். எனவே இது பற்றிகருத்து கூற முடியாது.

தி.மு.க, பி.ஜே.பி கூட்டணிக்கு எதிராக அ.தி.மு.க உள்ளிட்ட மதச்சார்பற்ற கட்சிகளின்போராட்டம் தொடரும். இம்மாதம் 30,31 -ம் தேதிகளில் மாநில குழு கூட்டம் கூடிஅரசியல் நிலை குறித்தும், கட்சி பணிகள் குறித்தும் விவாதிக்கும்.

தமிழகத்தில் மூன்றாவது அணி அமைய வாய்ப்பில்லை. பெட்ரோல் விலைஉயர்வுகண்டிக்கத்தக்கது. விலை உயர்வுக்கு கருணாநதி மெளனம் சாதிப்பதும்கண்டிக்கத்தக்கது என்று சங்கரய்யா கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+