தென் கொரிய அதிபருக்கு உலக அமைதிக்கான நோபல் பரிசு
ஓஸ்லோ:
உலக அமைதிக்கான நோபல் பரிசு தென் கொரிய அதிபர் கிம் தே- ஜங்குக்கு வழங்கப்படுகிறது.
பொருளாதாரத்தில் தாராளமயமான தென் கொரியாவின் அதிபரான இவர், கம்யூனிஸ சித்தாந்தத்தில் ஊறித்திளைத்த வட கொரியாவுடண் உறவு மேம்பட பெரும் பாடுபட்டார்.
அமெரிக்கா-ரஷ்யா இடையே பனிப்போர் முடிந்த போதும் கூட இந்த இரு நாடுகளிடையே பகை தொடர்ந்துகொண்டு தான் இருக்கிறது. ஆனால், கிம் எடுத்த முயற்சிகளால் இந்தப் பகுதியில் அமைதி நிலவுகிறது.
நாட்டின் அதிருப்தித் தலைவரகளில் ஒருவராக இருந்து பின்னர் அதே நாட்டின் அதிபராக உயர்ந்து காட்டியவர் 74வயதான கிம். கடந்த ஜூன் மாதம் வட கொரிய அதிபரை தானே சென்று சந்தித்து அமைதி திரும்பவலியுறுத்தினார்.
21ம் நூற்றாண்டுக்கான நோபல் அமைதிப் பரிசை வென்றுள்ளார். அமைதிக்கான நோபல் பரிசு பெற 150 பேரின்பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தன. டிசம்பரில் நார்வேயின் ஓஸ்லோ நகரில் இந்த விருது வழங்கப்படும்.












Click it and Unblock the Notifications