25 ஆண்டுகள் சிறையில் இருப்பார் ஜெ. .. சுவாமி ஆரூடம்

Subscribe to Oneindia Tamil

பழனி:

ஜெயலலிதா 25 ஆண்டுகள் சிறையில் இருக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று ஜனதாகட்சித் தலைவர் சுப்ரமணியம்சுவாமி கூறினார்.

பழனி பட்டத்து வினாயகர் கோவில் திடலில் நடந்த ஜனதா கட்சி பொதுக் கூட்டத்தில்சுவாமி பேசியதாவது:

டான்சி வழக்கில் தனி நீதமன்றத் தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா அப்பீல் போடமுடியாது. ஏனெனில் ஏற்கனவே தனி நீதிமன்றம் இவரை விடுவிக்க மறுத்தபோதுஅதை எதிர்த்து ஜெயலலிதா உயர் நீதிமன்றம் சென்றார். அதில் உயர் நீதிமன்றம்அவரை விடுவித்தது.

ஆனால், அதை ஆட்சேபித்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் அப்பீல்போட்டது.அந்த வழக்கில் ஜெயலலிதாவை விடுவித்தது செல்லாது என்றும், தனிநீதிமன்றம் மீண்டும் ஜெயலலிதாவை விசாரித்து விரைவாக தீர்ப்பு கூற வேண்டும்என்றும் உத்தரவிட்டது.

உச்ச நீதிமன்றமே இப்படி சொன்ன பிறகு ஜெயலலிதா, சசிகலாவால் அப்பீல் வழக்குபோடுவதற்கு வழியே இல்லை. இந்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு 3 ஆண்டு சிறை.

அடுத்து நிலக்கரி ஊழல் வழக்கு, வருமானத்திற்கு அதிகமான சொத்துக் குவிப்புவழக்கு, 100 கோடி ரூபாய் மதிப்புள்ள அரசின் பங்குகளை ஸ்பிக் நிறுவனத்திற்குவெறும் 10 கோடிக்கு விற்ற வழக்கு ஆகியவை உள்ளன.

இந்த வழக்குகளிலும் வரிசையாக தீர்ப்புகள் வரும்போது ஜெயலலிதா குறைந்தது 25ஆண்டுகளாவது சிறையில் இருக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றார் சுவாமி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+