ரஷ்ய ஏவுகணைகளில் பழுதை சரிசெய்து இந்திய பொறியாளர்கள் சாதனை

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

ரஷ்யாவிடமிருந்து வாங்கிய விமானத்தை தாக்கும் ஏவுகணைகளில் பழுதைச் சரி செய்து இந்திய ராணுவப் பொறியாளர்கள் சாதனை படைத்துள்ளனர்.

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கருவிகளைக் கொண்டு இப் பழுதை அவர்கள் சரி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த முஜாஹிதீன் அமைப்பிடமிருந்து ஸ்டிரிஞ்சர் ஏவுகணைகளை பாகிஸ்தான் வாங்கியது.

தனது ராணுவ பலத்தை அதிகரிக்க இந்தியாவும் அதே அளவு சக்தியும், திறமையும் கொண்ட ஐ.ஜி.எல்.ஏ. என்ற ஏவுகணைகளை ரஷ்யாவிடமிருந்து1990-ம் ஆண்டு துவக்கத்தில், வாங்கியது.

தாழ்வாகப் பறக்கும் வேவு விமானங்களைத் தாக்கும் திறன் கொண்டது இந்த ஏவுகணைகள். ஏவுகணைகளை மட்டுமே விற்ற ரஷ்யா, அந்தஏவுகணைகள் பழுதடைந்தால் பழுது பார்ப்பதற்கான தொழில்நுட்பத்தை இந்தியாவுக்கு விற்கவில்லை.

தேவைப்படும்போது அந்த தொழில்நுட்பத்தை ரஷ்யாவிடமிருந்து இந்தியா கேட்டுப் பெறவேண்டும். இந் நிலையில், அத்தகைய ஏவுகணைகளில் பழுதுஏற்பட்டது. மேலும், சில ஏவுகணைகள் சீரமைக்கப்படவும் வேண்டி இருந்தது.

இதையடுத்து பழுது பார்ப்பதற்கான தொழில்நுட்பத்தைக் கேட்டு ரஷ்யாவுக்கு இந்தியா கோரிக்கை விடுத்தது. ஆனால், அந்த தொழில்நுட்பம் வந்துசேர காலதாமதமாகியது.

இதனால், இந்திய ராணுவத்தில் உள்ள எலக்ட்ரிகல் மற்றும் மெக்கானிக்கல் பிரிவு பொறியாளர்களே அந்த பழுதைச் சரிபார்க்க முயன்றனர்.ஆச்சரியப்படும் வகையில் அந்த பழுதை அவர்கள் சரிபார்த்துள்ளனர்.

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பழுதுபார்க்கும் கருவிகளை வைத்து அவர்கள் இச் சாதனையைப் புரிந்துள்ளனர் என்று ஏவுகணை பழுதுபார்க்கும் நிலையத்தலைவர் எஸ்.கே. ஜெயின் தெரிவித்தார்.

போதுமான தொழில்நுட்ப உதவி கிடைக்காமலும், ஐ.ஜி.எல்.ஏ. போன்ற நவீன ஏவுகணைகளைப் பழுதுபார்ப்பதற்கான வசதியில்லாமலும்உள்நாட்டிலேேய தயாரிக்கப்பட்ட கருவிகளின் உதவியால் தங்களது திறமையை அடிப்படையாக வைத்து இந்தியப் பொறியாளர்கள் இச் சாதனையைப்புரிந்துள்ளனர் என்றார் ஜெயின்.

இந்தியப் பொறியாளர்களின் இந் நடவடிக்கையால், நவீன ஏவுகணைகளின் முக்கிய பாகங்கள் மீண்டும் சரிசெய்யப்பட்டன. அவற்றின் செயல்திறன் எந்தவகையிலும் சிறிதும் குறைந்துவிடவில்லை. அவற்றின் ஆயுளும் நீடிக்கும் என்று ஜெயின் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+