For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராஜ்குமார் குடும்பம் சென்னையிலிருந்து இடம் பெயர்ந்தது ஏன்? மாறன் ஆதரவாளர்கள் விளக்கம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

பெங்களூரில் எம்.ஜி.ஆர். கண் எதிரிலேயே அவரது படத்தை செருப்பால் அடித்து,நடிகர் ராஜ்குமாரின் ரசிகர்கள் அவமானப்படுத்தினர் என்று தமிழ்த் தீவிரவாதிமாறனின் ஆதரவாளர்கள் வெளியிட்டுள்ள புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.

வீரப்பனுடன் காட்டுக்குள் இருக்கும் தீவிரவாதி மாறனின் ஆதரவாளர்கள்வெளியிட்டுள்ள புத்தகத்தில் கூறப்பட்டுள்ளதாக காலைக்கதிர் நாளிதழ்வெளியிட்டுள்ள செய்தி:

கர்நாடகத்தில், துவக்கப் பள்ளியில் இருந்து கன்னடம் மட்டுமே பயிற்சி மொழியாகஇருக்க வேண்டும் என 1982-ம் ஆண்டு கோகாக் கமிட்டி அறிக்கை வெளியிட்டது.எங்கும் கன்னடம்,எதிலும் கன்னடம் என்ற நிலை இருந்து வந்தது. இதை ஆதரித்துகர்நாடகம் முழுவதும் ராஜ்குமார் சுற்றுப்பயணம் செய்து தமிழ் மொழிக்கு எதிராகபிரசாரம் மேற்கொண்டார். கன்னட மொழிக்காக போராட்டம் நடத்தினார்.

தமிழை அழிக்க முயலும் இந்த அறிக்கையை திரும்பப் பெறுமாறு தமிழர்கள்போராட்டம் நடத்தினர். இதனால் தமிழர்கள் குடிசைகள் கொளுத்தப்பட்டன. தமிழ்பெண்கள் மான பங்கப்படுத்தப்பட்டனர். தமிழர் நடத்திய ஊர்வலங்கள் மீது போலீசார்துப்பாக்கி சூடு நடத்தினார்கள்.

1982-ம் ஆண்டு தமிழர்கள் நடத்திய இந்த வீரப் போராடட்த்தில் கோலார்தங்கவயலைச் சேர்ந்த மோகன், பால்ராஜ், உதயகுமார், பரமேசு என்ற நான்கு தமிழ்இளைஞர்களும், பெங்களுரில் இரண்டு தமிழ் இளைஞர்களும் துப்பாக்கி குண்டுக்குபலியானார்கள்.

இதை எதிர்த்து எம்.ஜ.ஆர். அறிக்கை வெளியிட்டார். உ.யிரிழந்த தமிழர்களுக்குஇழப்பீடு வழங்கி, அஞ்சலியும் செய்தார். இது ராஜ்குமார் அபிமானிகளுககுகோபமேற்படுத்தியது.

1982-ம் ஆண்டு நடந்த தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவு கேட்டு விவசாயசங்கத் தலைவர் நாராயணசாமியை சந்திக்க எம்.ஜி.ஆர். பெங்களூர் வந்தார்.அப்போது அவர் கண்ணெதிரிலேயே வேனில் ஒட்டப்பட்டிருந்த எம்.ஜி.ஆர். படத்தைராஜ்குமார் அபிமானிகள் செருப்பால் அடித்து அவமானப்படுத்தினர்.

இந்த சம்பவத்திற்கு பின்புதான் நடிகர் ராஜ்குமார் சென்னையிலிருந்து குடும்பத்துடன்பெங்களூருக்கு குடிபெயர்ந்தார்.

காவிரி நடுவர் நீதி மன்றம் இடைக்கால தீர்ப்பு வழங்கியதை ஒட்டி கலவரம் வெடித்தது.இந்த கலவரத்தில் 300 தமிழர்கள் உயிரிழந்தனர். தமிழர்கள் நடத்தி வந்த கடைகள்,தொழில் நிறுவனங்கள் தமிழர் வீடுகள் சூறையாடப்பட்டன.

தமிழர்கள் உயிருக்கு அஞ்சி நடந்தே தமிழ்நாட்டுக்குச் சென்றார்கள். பங்ாகரப்பாவீட்டில் இருந்தும், காந்தி நகரில் உள்ள ராஜ்குமாரின் வஜ்ரேஸ்வரி அலுவலகத்தில்இருந்தும், ராஜ்குமார் சங்க கட்டிடத்தில் இருந்தும் கன்னட ஆதரவாளர்கள்லாரிகளிலும், வேன்களிலும் அனுப்பி வைக்கப்படடனர். அப்போது நடந்ததாக்குதலை தமிழர்கள் யாரும் மறக்க முடியாது.

உடைமைகளை இழந்த தமிழர்கள் சாம்ராஜ் நகர் வழியாக சத்தியமங்கலம் வந்தனர்.அவர்களுக்கு அங்கிருந்த தமிழர்கள் உதவினர். இதை அறிந்த நல்லூர், ராமபுரம்போலீசார் கர்நாடகத்தில் இருந்து வந்த தமிழர்களையும், அவர்களுக்குஉதவியவர்களையும் அடித்து உதைத்து துன்புறுத்தினர்.

இதை கேள்விப்பட்ட வீரப்பன் கோபம் கொண்டு அந்த போலீஸ் நிலையத்தைதரைமட்டமாக்கி 6 காவலர்களையும் சுட்டுக் கொன்றார். வீரப்பனிடம்இயற்கையாகவே தமிழ் ரத்தம் ஓடிக் கொண்டிருக்கிறது என்பது இதன் மூலம்உறுதியாகிறது என்று அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X