வாஜ்பாய் சிகிச்சை பெறும் மருத்துவமனையில் வெடிகுண்டு மிரட்டல்
Subscribe to Oneindia Tamil
மும்பை:
பிரதமர் வாஜ்பாய் சிகிச்சை பெற்றுவரும் பிரீச்கன்டி மருத்துவமனைக்கு வெடிகுண்டுமிரட்டல் வந்தது. இது தொடர்பாக வாலிபர் ஒருவரை கைது செய்து போலீசார்விசாரணை செய்து வருகின்றனர்.
வாஜ்பாய்க்கு மும்பையில் உள்ள பிரீச்கன்டி மருத்துவமனையில் மூட்டுமாற்று அறுவைசிகிச்சை செவ்வாய்க்கிழமையன்று நடைபெற்றது. இந்த நிலையில், புதன்கிழமை இரவுமருத்துவமனையில் குண்டு மறைத்து வைக்கப்படிருப்பதாக மர்ம தொலைபேசி ஒன்றுவந்தது.
இத்ை தொடர்ந்து மருத்துவமனை முழுவதிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டது.சோதனைக்குப்பின் அது வதந்தி என தெரியவந்தது.
தொலைபேசியில் பேசியதாக வடமேற்கு மும்பையில உள்ள கந்திவலி பகுதியைச்சேர்ந்த இஸ்மாயில் காசிம் ஷேக் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணைசெய்து வருகிறார்கள்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மருத்துவமனையில் பாதுகாப்புபலப்படுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications