பட்டாசு வெடித்து 2 சிறுவர்கள் பலி
Subscribe to Oneindia Tamil
திருநெல்வேலி:
நெல்லை மாவட்டம் சங்கரன் கோவில் நகரில் விற்பனைக்கு வைத்திருந்த பட்டாசுகள் வெடித்து விபத்து ஏற்பட்டதில் 2 சிறுவர்கள் உயிரிழந்தனர்.
சங்கரன் கோவிலைச் சேர்ந்த ஒருவர் இந்த பட்டாசுகளை தனது வீட்டில் வாங்கி வைத்திருந்தார். விற்பனைக்காக இந்த பட்டாசுகள் இருப்புவைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் வெள்ளிக்கிழமை இந்த பட்டாசுகள் திடீரென வெடித்தன.
விபத்தில் இரண்டு சிறுவர்கள் கருகி இறந்தனர். போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications