வாழப்பாடி, ராமதாசுக்கு கருணாநிதி அறிவுரை
சென்னை:
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ராம்தாசும், தமிழக ராஜீவ் காங்கிரஸ்தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தியும் பொது மேடைகளில் ஒருவரை ஒருவர் தாக்கிபேசிக் கொள்வதை நிறுத்த வேண்டும் என தமிழக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
வெள்ளிக்கிழமையன்று கோட்டையில் நிருபர்களுக்கு முதல்வர் பேட்டியளித்தார்.அந்த பேட்டியில் அவர் கூறிதாவது:
டாக்டர் ராமதாஸ் தேசிய ஜனநாயகக்கூட்டணி கூட்டத்ததை தமிழகத்தில் கூட்டவேண்டும் எனக் கூறியுள்ளார். தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி கூட்டம் எனஎதுவும் கிடையாது. தேசிய ஜனநாயகக் கூட்டணி கூட்டம் டெல்லியில்தான்நடத்தப்படுகிறது.
முன்பு ஒருமுறை இங்கு கூட்டம் கூட்ப்பட்டது. அது போன்ற கூட்டத்தை தொடர்ந்துகூட்ட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. அது போல் கூட்டத்தைக் கூட்டினால்வாழப்பாடி எல்லாவற்றையும் சொல்கிறேன் எனக் கூறியுள்ளதாக செய்திகள்வெளியாகி உள்ளன.
முதலில் ராமதாசும், வாழப்பாடி ராமமூர்த்தியும் பொதுக்கூட்டங்களில் ஒருவரைஒருவர் தாக்கி பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இந்த சுமுகமான சூழ்நிலைஏற்பட்டால்தான் இங்கு கூட்டம் நடத்துவது பற்றி யோசிக்க முடியும்.
கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்றாலும், நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றாலும்அதை வாஜ்பாயோ அல்லது தேசிய ஜனநாயக அமைப்பாளர் ஜார்ஜ்பெர்னாண்டஸ்தான் எடுக்க வேண்டும். யார் மீதும் நடவடிக்கை எடுக்கும் உரிமைஎனக்கு இருப்பதாகத் தெரியவில்லை.
எந்தக்கட்சியினர் பஸ்ஸை எரித்தாலும் அவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. இதில் பாரபட்சம் ஏதும் இல்லை. பஸ்சை எரித்தால் அவர்கள் மீது தேசியபாதுகாப்புச் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்ககப்படும்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஓராண்டு ஆட்சி சிறப்பான ஆட்சியாகும்.தோல்விகள் என எதையும் கூற முடியாது சாதனைகள் எனக் குறிப்பிடவேண்டுமானால் காஷ்மீரை எந்த நிலையிலும் விட்டுக் கொடுப்பதில்லை என்ற நிலைஎடுத்திருப்பதைக் கூறலாம் என அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications