அதிமுக கூட்டணி கலகலக்கும் .. ஜனா. கிருஷ்ணமூர்த்தி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

அதிமுக கூட்டணியில் விரைவில் மாற்றம் வரும் என்று பாரதீய ஜனதா கட்சியின்துணைத் தலைவர் ஜனா.கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.

பாண்டிச்சேரியில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

மத்திய வாஜ்பாய் அரசு ஓராண்டு நிறைவு பெற்றுள்ளதை அடுத்து வருகிற 20ம் தேதிமுடிய நாடு முழுவதும் பொதுக் கூட்டங்கள், கருத்தரங்குகள் நடத்தப்பட உள்ளன.இந்த ஓராண்டில் இந்தியாவின் வெளிநாட்டு தொடர்பில் வெகுவான முன்னேற்றம்ஏற்பட்டுள்ளது.

சென்னை, மும்பை, கல்கத்தா, டெல்லி ஆகிய பெருநகரங்களை இணைக்க பிரதமர்அறிவித்த 7500 கிலோ மீட்டர் தேசிய நெடுஞ்சாலை பூர்த்தி அடையும் நிலையில்உள்ளது.

புதுவை அரசியலில் ஸ்திரத்தன்மை இல்லை. எந்த கட்சிக்கும் பெரிய செல்வாக்குகிடையாது. புதுவையில் ஒரு திடமான ஆட்சி அமைய வேண்டிய அவசியம் உள்ளது.அதை காங்கிரசால் தர முடியாது.

புதுவையில் 30 ஆண்டுகள் நடக்காத உள்ளாட்சித் தேர்தலை வரும் சட்டமன்றத்தேர்தலுக்கு முன்பாக நடத்த வேண்டும். அப்படி நடத்தினால் எல்லா கட்சிகளுக்கும்அது ஒரு பரிசோதனைக் களமாக அமையும்.

புதுவை சட்டமன்றத்தில் பாஜகவுக்கு இடம் இல்லாவிட்டாலும் கூட இம்மாநிலத்தில்கட்சி மிக வேகமாக வளர்ந்து வருகிறது. வரும் தேர்தலில் தீவிர போட்டியில்ஈடுபடுவோம்.

தமிழகத்தில் த.மா.கா. திக்குமுக்காடும் நிலையில் உள்ளது. இது அவர்களுக்குநல்லதல்ல. அவர்கள் ஒரு தெளிவான முடிவை எடுக்க வேண்டும். இல்லையென்றால்வரும் தேர்தலில் அவர்களுக்கு சங்கடம் ஏற்படும்.

அதிமுகவின் ஜீவநாடியே ஜெயலலிதாதான். அவருக்கு இப்போது 3 ஆண்டுதண்டனை விதிக்கப்பட்டுள்ளதால் அவர் தேர்தலில் போட்டியிட முடியாது.

அதிமுகவுடன் கூட்டணி அமைத்தவர்களின் நிலை என்ன என்பது 2 மாதங்களில்தெரிந்து விடும். அதிமுக கூட்டணியில் நிச்சயம் மாற்றம் வரும் என்றார் ஜனா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+