அநாகரீகமாக செயல்படுகிறார் கருணாநிதி .. ஜெ.

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மக்களை சந்திக்கும் மன வலிமையை கருணாநிதி இழந்து விட்டார். எனவே எதிர்க்கட்சிகளை ஒடுக்க அநாகரீகமான வழிமுறைகளை கையாளுகிறார் என்று அ.தி.மு.க.பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து ஜெயலலிதா சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

கருணாநிதி குடும்பத் தகராறில் பொதுச் சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன. 40க்கும்மேற்பட்ட பஸ்கள் எரிக்கப்பட்டன. பொதுச் சொத்துகளை சேதப்படுத்திய கருணாநிதிகட்சியினர் மீது எந்தவித நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை.

தனி நீதிமன்றத் தீர்ப்புக்கு பிறகு உண்ணாவிரதம், சாலை மறியல், ஆர்ப்பாட்டம் என்றுஅமைதி வழி அறப் போராட்டங்களில் ஈடுபட்ட அ.தி.மு.க நிர்வாகிகளையும்,தொண்டர்களையும் கைது செய்து தி.மு.க. அரசு அநீதி இழைத்துள்ளது.

வலங்கைமான் அருகே பஸ்சை எரித்தவர்கள் யாரென்று கூட விசாரிக்காமல் ஒன்றியச்செயலாளர் குருமூர்த்தி உள்ளிட்ட 5 அ.தி.மு.க நிர்வாகிகளை அரசு தேசியபாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.

அதுபோலவே தமிழகமெங்கும் அமைதியான போராட்டங்கள் நடத்தியஅ.தி.மு.க.வினர் ஜாமீனில் வெளிவர முடியாத வழக்குகள் போட்டு சிறையில்அடைத்துள்ளனர்.

நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு அ.தி.மு.க. நிலை குலைந்து விடும் என்று கருதியோர்திகைக்கும் வகையில் கட்சி நிமிர்ந்து நிற்பதைப் பொறுக்க முடியாத கருணாநிதி அரசு,அ.தி.மு.க.வினர் மீது கட்டவிழ்த்து விட்ட கைது நடவடிக்கையை கண்டிக்கிறேன்.

அ.தி.மு.க .செயலிழந்து விடும், துவண்டு விடும், தளர்ந்து விடும் என்ற கற்பனையில்மிதக்கும் கருணாநிதி இடிந்து போகும் வகையில் வரும் 16ம் தேதி ஆர்ப்பாட்டம்நடைபெறும் என்று அறிவித்தேன்.

அதுவரை காளிமுத்து உள்ளிட்ட ஒரு சிலரை விடுதலை செய்தவர்கள், என்னுடையபோராட்ட அறிவிப்புக்கு பிறகு யாரையும் விடுதலை செய்யவில்லை.

கட்சிப் பணிகள் மும்முரமாக நடைபெறவுள்ள நலையில், கைது செய்த அதிமுகவினர்ஜாமீனில் விடுவதற்குக் கூட வேண்டுமென்றே கருணாநிதி அரசு தற்போது தாமதம்செய்து வருகிறது.

ஏற்கனவே அ.தி.மு.க.வினர் விடுவிக்கப்பட்ட செய்தி அறிந்த கருணாநிதி,உடனடியாக அதற்கு காரணமான காவல் துறை அதிகாரிகளை அழைத்து திட்டியும்,இடமாறுதல் செய்து விடுவதாக மிரட்டியும், இனிமேல் யாரும் விடுதலைசெய்யப்பட்டால் பணி நீக்கம் உள்ளிட்ட கொடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்என்று எச்சரித்ததாகவும் தெரிகிறது.

கருணாநிதிக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை அறவே அற்றுப் போய் விட்டது. மக்களைசந்திக்கும் மன வலிமையற்ற கருணாநிதி, எதிர்க் கட்சிகளை அடக்கி ஒடுக்கஅநாகரிகமான வழிமுறைகளை கையாளுகிறார். கைது செய்த அ.தி.மு.க.வினர்அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்ஜெயலலிதா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+