காஷ்மீரில் ஒரே நாளில் 13 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் நடந்த தீவிரவேட்டையில் 13 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
உதம்பூர் மாவட்டம் மாஹோர் மலைப் பகுதியில் ஆறு தீவிரவாதிகளை பாதுகாப்பபுப்படை வீரர்கள் சுட்டுக் கொன்றனர். அனந்த்நாக் மாவட்டத்தில், தூரு என்ற இடத்தில்,மூன்று தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
கிராமத்து மக்கள் கொடுத்த தகவலின்படி தீவிரவாதிகளைத் தேடி பாதுகாப்புப் படைவீரர்கள் தூரு கிராமத்திற்கு விரைந்தனர். அப்போது அங்கு மறைந்திருந்ததீவிரவாதிகள் மீது வீரர்கள் சரமாரியாகத் தாக்குதல் நடத்தினர். இதில் 3 பேர் செத்தனர்.
பனிஹால் பகுதியில் 2 பேரும், சுந்தர்பானி, புத்தால் பகுதிகளில் தலா ஒருதீவிரவாதியும் பாதுகாப்புப் படை வீரர்களால் கொல்லப்பட்டனர்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications