பரிசு மழையில் நனைந்தார் கர்னம் மல்லேஸ்வரி

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்:

சிட்னி ஒலிம்பிக்கில் இந்தியாவுக்குக் கிடைத்த ஒரே பதக்கத்தை வென்ற கர்னம்மல்லேஸ்வரி, பலவித பாராட்டுகள்ை தொடர்ந்து பரிசுமழையில் நனைந்தார்.

சிட்னி ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 69 கிலோ எடைப்பிரிவில் கர்னம் மல்லேஸ்வரிவெண்கலப் பதக்கம் வென்றார்.

சிட்னி ஒலிம்பிக்கில் இந்தியா வென்ற ஒரே பதக்கம் அது என்பது மட்டுமல்லாமல்,ஒலிம்பிக் போட்டிகளில் தனிநபர் பதக்கம் வென்ற முதல் வீராங்கனை என்றசாதனையையும் அவர் படைத்தார்.

அத்தகைய சாதனையைப் படைத்த கர்னம் மல்லேஸ்வரிக்கு ஆந்திர தலைநகர்ஹைதராபாத்தில் வெள்ளிக்கிழமை மாலை பாராட்டு விழா நடத்தப்பட்டது.

முன்னதாக ஹைதராபாத் வந்த அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.நகரம் முழுவதும் பட்டாசு கொளுத்தப்பட்டது. திறந்த ஜீப்பில் மல்லேஸ்வரி ஊர்வலம்அழைத்து வரப்பட்டார். ஊர்வலப் பாதை முழுவதும் பள்ளிச் சிறுவர், சிறுவர்வரிசையாக நின்று கையசைத்து அவருக்குப் பாராட்டு தெரிவித்தனர்.

சிட்னி ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவுடன், தான் ஒரு பளுதூக்கும் பயிற்சி அகாதெமிஅமைக்க இருப்பதாகவும் அங்கு, ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பளுதூக்குதலில்ஆர்வம் உள்ளவர்களுக்குப் பயிற்சி அளிக்க விரும்புவதாகவும் கர்னம் மல்லேஸ்வரிதெரிவித்தார்.

அவரது ஆசையை நிறைவேற்றும் வகையில் லால் பகதூர் மைதானத்தில்வெள்ளிக்கிழமை நடந்த பாராட்டு விழாவில், ஹைதராபாத்தில் ஜூபிளி ஹில்பகுதியில் பளுதூக்கும் பயிற்சி அகாதெமி அமைக்க 532 சதுர அடி பரப்பளவு நிலம்வழங்கப்பட்டது.

ஹைதராபாத் நகரில் எங்கு தனது அகாதெமியை அமைக்க கர்னம் மல்லேஸ்வரிவிரும்புகிறாரோ அங்கு அவருக்கு நிலம் அளிக்கப்படும் என்று மாநில முதல்வர்சந்திரபாபு நாயுடு அறிவித்திருந்தார்.

அதன்படி நகரம் முழுவதும் சுற்றிப் பார்த்த கர்னம் மல்லேஸ்வரி, கடைசியில் ஜூபிளிஹில் பகுதியில் அந்த இடத்தைத் தேர்வு செய்தார். முதல்வர் மற்றும் முக்கியபிரமுகர்கள் வசிக்கும் அந்த மிகப் பிரபலமான, விலை உயர்ந்த பகுதியில்வழங்கப்பட்ட அந் நிலத்தின் மதிப்பு ரூ.25 லட்சமாகும்.

அகாதெமிக்கான கட்டடத்தை ஆந்திர மாநில அரசே கட்டித் தரும் என்று மாநிலநகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் பன்டாரு தத்தார்ரேயா அறிவித்தார்.

ஹைதராபாத்தில் வீடு கட்டுவதற்காக ரூ.25 லட்சமும், பதக்கம் வென்றதற்காக ஊக்கத்தொகையாக ஆந்திர மாநில அரசு சார்பில் ரூ. 10 லட்சமும் வழங்கப்பட்டது. ரொக்கப்பரிசுகளுக்கான காசோலையையும், நிலம் தொடர்பான ஆவணங்களையும் ஆந்திரமுதல்வர் சந்திரபாபு நாயுடு வழங்கினார்.

இது தவிர, 5 பெரிய தொழில் நிறுவனங்களும் தங்களது பங்காக பளுதூக்கும் பயிற்சிஅகாதெமிக்கு மொத்தம் ரூ. 9 லட்சம் வழங்கின. ஹூண்டாய் நிறுவனம் தனது பங்காகஒரு சான்ட்ரோ காரை மல்லேஸ்வரிக்குப் பரிசாக வழங்க உள்ளது.

ஏற்கெனவே மகாராஷ்டிர அரசு ரூ.51 லட்சமும், ஹரியானா அரசு ரூ.25 லட்சமும்மல்லேஸ்வரிக்கு பரிசாக அளிக்க உள்ளதாக அறிவித்துள்ளன என்பதுகுறிப்பிடத்தக்கது.

வெள்ளிக்கிழமை நடந்த பாராட்டு விழாவில் சிட்னி ஒலிம்பிக்கில் கலந்து கொண்டஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பாட்மின்டன் வீரர் கோபிசந்த், ஹாக்கி வீரர் முகேஷ்குமார் ஆகியோருக்கும் தலா ரூ. 5 லட்சம் வழங்கப்பட்டது.

மல்லேஸ்வரியின் பயிற்சியாளர் ரஷ்யாவைச் சேர்ந்த டார்னெகோவுக்கு ரூ.1 லட்சமும்,ஆந்திர மாநில காவல்துறை சார்பில் மல்லேஸ்வரியின் பெற்றோருக்கு ரூ. 1லட்சமும்வழங்கப்பட்டது.

இப் பாராட்டு விழாவில் மக்களவைச் சபாநாயகர் பாலயோகி, ஆந்திர ஆளுநர் சி.ரங்கராஜன், இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் சுரேஷ் கல்மாதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+