பொங்கி எழுந்த மக்கள் .. பரிதவித்த அமைச்சர்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தொகுதியில் குடிநீர் இல்லை, சாலை இல்லை என்று சொல்லி அரசு நிகழ்ச்சியில்பங்கேற்க வந்த தி.மு.க. பெண் அமைச்சரை முற்றுகையிட்டு "கெரோ செய்தனர்பொதுமக்கள். இதனால் அந்நிகழ்ச்சியில் பேச முடியாமல் திரும்பினார் அந்தஅமைச்சர்.

இந்த பரபரப்புச் சம்பவத்தை மற்ற இரண்டு தி.மு.க .அமைச்சர்களும் வேடிக்கைபார்த்தனர். அவர்களது சமாதான முயற்சியையும் பொது மக்கள் ஏற்கவில்லை.

சென்னை ஆர்.கே.நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், சமூக நலத்துறைஅமைச்சருமான சற்குணபாண்டியன் மற்றும் சீனியர் மந்திரி கே.என்.நேரு, பால்வளத்துறை அமைச்சர் சுந்தரம் ஆகிய மூவரும் தண்டையார்பேட்டையில் மண்ணெண்ணெய்வழங்கும் நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்றனர்.

மூன்று அமைச்சர்கள் பங்கேற்கும் அரசு நிகழ்ச்சி என்பதால் தடபுடல் ஏற்பாடுகள்செய்யப்பட்டு, கட்சியினரும், அதிகாரிகளும் நிறைய பேர் கூடியிருந்தனர்.

அந்த நேரத்தில் சற்குண பாண்டியனின் தொகுதியை சேர்ந்த நேதாஜி நகர் மற்றும்அதைச் சுற்றியுள்ள பகுதி மக்கள் 500 பேர் அங்கு முன்கூட்டியே வந்து காத்திருந்தனர்.

அமைச்சர் சற்குணபாண்டியன் கார் வந்து நின்றதும் அதிகாரிகள் ஓடோடி சென்றுஅவரை வரவேற்க முயன்றனர். அந்த நேரத்தில் தயாராக இருந்த பொதுமக்கள்அமைச்சரின் காரை சுற்றி முற்றுகையிட்டனர்.

தொகுதிப் பிரச்சினையை தீர்க்காத அமைச்சரை காரை விட்டு இறங்க விட மாட்டோம்.விழா மேடைக்கு செல்ல விட மாட்டோம் என்று கோஷமிட்டனர்.

தொகுதியில் குடி நீர் வசதி இல்லை, நல்ல சாலை வசதி இல்லை, சாக்கடை கழிவு நீர்செல்ல வசதி இல்லை என்று அமைச்சரை பார்த்து பொதுமக்கள் ஆவேசமாக பேசஆரம்பித்தனர். அரண்டு போன அமைச்சர் காரை விட்டு இறங்க முடியாமல் தவித்தார்.

நிலைமையை அறிந்த மற்ற இரண்டு அமைச்சர்களும் போலீசார் உதவியுடன் ஓடோடிவந்து பெண் அமைச்சரை காரை விட்டு வெளியில் வரச் செய்தனர். ஆனாலும், அவரைநகர விடாமல் சுற்றி நின்று கோஷமிட்டபடி கெரோ செய்தனர் மக்கள்.

போலீஸ் உயரதிகாரிகள் விரைந்து வந்து கெரோ செய்த பொதுமக்களைசமாதானப்படுத்தி அமைச்சரை அவர்களிடம் இருந்து மீட்டனர். ஆனாலும், அவரைவிழாவில் பங்கேற்க அனுமதிக்க மாட்டோம் என்று பொது மக்கள் பிடிவாதம்பிடித்தனர்.

இதனால் வேறு வழியின்றி வெறும் ரிப்பனை மட்டும் வெட்டி விட்டு வந்த வேகத்தில்திரும்பி விட்டார் அமைச்சர். உடன் வந்த அமைச்சர்களும் ஓரிரு வார்த்தைகளுடன்நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு அடுத்த நிகழ்ச்சிக்கு சென்று விட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+