நெடுமாறனே சரியான தூதர்.. தமிழ்த் தீவிரவாதிகள்
ஈரோடு:
தமிழ் உணர்வுள்ள பழ. நெடுமாறன், வீரப்பனிடம் தூதராகச் சென்றதில் எந்தத் தவறும்இல்லை என்று சிறையில் உள்ள தமிழ்த் தீவிரவாதிகள் சத்தியமூர்த்தி, மணிகண்டன்ஆகியோர் கூறியுள்ளனர்.
திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்த இரு தீவிரவாதிகளும், வீரப்பனால்விடுதலை செய்யக் கோரப்பட்டவர்களில் இருவர். பவானி நீதிமன்றத்தில் நடந்தவிசாரணைக்காக வெள்ளிக்கிழமை இருவரும் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டனர்.
நீதிமன்ற வளாகத்தில் குழுமியிருந்த செய்தியாளர்களிடம் இவர்கள் பேசுகையில்,தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் மற்றும் பேராசிரியர் கல்யாணி,சுகுமாறன் ஆகியோர் தமிழ் உணர்வு உள்ளவர்கள். தமிழர்களுக்காக போராடுபவர்வீரப்பன். எனவே ராஜ்குமார் விவகாரத்தில் வீரப்பனிடம் தூதராக செல்ல நெடுமாறன்குழுவினர் பொருத்தமானவர்கள்தான்.
இந்தப் பிரச்சினையை இக்குழுவினர் சரியான முறையில் அணுகுவர். கோரிக்கைகள்நிறைவேறும் வரை ராஜ்குமாரை, வீரப்பன் விடுவிக்க மாட்டார் என்று அவர்கள்தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications