டெல்லியில் பாலஸ்தீன மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
டெல்லி:
தங்கள் நாட்டில் சில பகுதிகளை ஆக்கிரமித்துள்ள இஸ்ரேல் படையினர் உடனே அப்பகுதிகளை விட்டு வெளியேறவேண்டும் என்று கோரி இந்தியாவில் தங்கியிருக்கும்பாலஸ்தீன மாணவர்கள், டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம்நடத்தினர்.
சனிக்கிழமை நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய-பாலஸ்தீன நட்புறவு அமைப்புஏற்பாடு செய்திருந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு முன்னதாக நடந்த கண்டன ஊர்வலத்தில்சமூக நல ஊழியர்களும், பாலஸ்தீன மாணவர்களும் கலந்து கொண்டனர்.
ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் இஸ்ரேலுக்கு எதிரான கோஷங்களைஎழுப்பினர். பாலஸ்தீன பகுதியில் இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ளதை எதிர்த்தும் அவர்கள்கோஷமிட்டனர். ஊர்வலத்தின் முடிவில் இஸ்ரேல் தூதரகத்தில் அவர்கள் கோரிக்கைமனு கொடுத்தனர்.
மேற்காசியப் பகுதியில் உள்ள இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் இடையே கடந்தசில வாரங்களாக கடும் சண்டை நடந்து வருகிறது. இரு நாட்டுக்கும் இடையே உள்ளநிலப்பரப்பு தொடர்பாக இச் சண்டை நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications