ராமதாஸை விட மாட்டேன் .. ராமமூர்த்தி

Subscribe to Oneindia Tamil

கோயம்புத்தூர்:

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸை நான் தொடர்ந்து விமர்சிப்பேன்.அதனால், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மதிப்பு எந்த வகையிலும் குறையாதுஎன்று தமிழக ராஜீவ் காங்கிரஸ் கட்சித் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி கூறினார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சியும், தமிழக ராஜீவ் காங்கிரஸ்கட்சியும் உறுப்பினர்களாக உள்ளன. மத்திய அமைச்சரவையிலும் பாட்டாளி மக்கள்கட்சி இடம் பெற்றுள்ளது.

இந் நிலையில், பாமக தலைவர் ராமதாஸும், தமிழக ராஜீவ் காங்கிரஸ் தலைவர்வாழப்பாடி ராமமூர்த்தியும் ஒருவரை ஒருவர் எதிர்த்து கடுமையாக விமர்சித்துவருகின்றனர். இதனால், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பெரும் பிரச்சினைஉருவெடுத்தது.

இதையடுத்து தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவராக உள்ளமுதல்வர் கருணாநிதி, அரசியல் காரணங்களுக்காக இருவரும் சண்டையிட்டுக்கொள்ளவேண்டாம் என்ற ராமதாஸையும், வாழப்பாடி ராமமூர்த்தியையும்கேட்டுக்கொண்டார்.

இந் நிலையில், கோவையில் வாழப்பாடி ராமமூர்த்தி நிருபர்களைச் சந்தித்துபேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

ராமதாஸை எதிர்த்து நான் விமர்சிப்பது அரசியல் காரணங்களுக்காக அல்ல. அவர்வன்னிய சமுதாய மக்களை ஏமாற்றுவதை எதிர்த்துத்தான் நான் விமர்சித்துவருகிறேன். மற்றபடி வேறு காரணம் ஏதுமில்லை.

வன்னிய மக்களை ராமதாஸ் தொடர்ந்து ஏமாற்றும் வரை அவரை நான் தொடர்ந்துவிமர்சிப்பேன். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமிழக ராஜீவ் காங்கிரஸ் உறுப்பினர்இல்லை என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

அது தொடர்பாக பிரதமர் வாஜ்பாயிடமோ அல்லது பாதுகாப்புத் துறை அமைச்சர்ஜார்ஜ் பெர்னான்டஸிடமோ இருந்து கடிதம் வாங்கி வரட்டும். அதன்பிறகு நான் எனதுபதிலைத் தெரிவிப்பேன்.

ராமதாஸை நான் தொடர்ந்து விமர்சிப்பதால் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மதிப்புஎந்தவகையிலும் பாதிக்கப்படாது.

தமிழக சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. அதிமுகபொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு ஊழல் வழக்கில் தண்டனை வழங்கப்பட்டுள்ளநிலையில், தமிழகத்தில் புதிய அரசியல் கூட்டணி ஏற்படுவது பற்றியோ அந்தகூட்டணி எப்படி இருக்கும் என்பதைப் பற்றியோ கூறுவதற்கு இன்னும் காலம்கனியவில்லை.

ஆனால், சட்டப்பேரவைத் தேர்தலில் நிச்சயம் கடும் போட்டி இருக்கும். எந்த ஒருகட்சிக்கும் ஆட்சி அமைக்க அருதிப் பெரும்பான்மை வெற்றி கிடைக்காது என்றார்வாழப்பாடி ராமமூர்த்தி.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+