எனது தந்தையை வீரப்பன் கொடுமைப்படுத்தவில்லை .. ராஜ்குமார் மகன்
பெங்களூர்:
கன்னட நடிகர் ராஜ்குமாரின் மகன் சிவராஜ்குமார் தனது தந்தை வீரப்பனால்கொடுமைப்படுத்தப்பட்டதாக வந்த தகவல்களை மறுத்துள்ளார்.
இது குறித்து பெங்களூரில் அவர் சனிக்கிழமையன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.பேட்டியின் விவரம்:
எங்களுக்கு எங்கள் தந்தையிடமிருந்து ஐந்து நாட்களுக்கு முன்பு ஒர் ஆடியோ கேசட்வந்தது. ஆனால் அதில் அவர் வீரப்பன் பற்றி ஏதும் கூறவில்லை.
அவர் எங்கள் அனைவரையும் பிரிந்திருப்பது வேதனை அளிக்கிறது என்றும், எங்கள்அனைவரையும் நம்பிக்கை இழக்காமல், தெய்வ நம்பிக்கையோடு இருக்கும்படியும்தான் கேட்டுக் கொண்டுள்ளார்.
அவர் அனுப்பிய கேசட்டில் எந்த இடத்திலும் வீரப்பன் தன்னிடம் கொடுமையாகநடந்து கொண்டதாக கூறவில்லை. தடா கைதிகள் பற்றியும் அவர் எதுவும்பேசவில்லை.
பத்திரிக்கைகளில் வீரப்பன் எங்கள் தந்தையிடம் கொடுமையாக நடந்து கொண்டதாகவந்தது தவறான தகவல்கள். நாங்கள் அனைவரும் காட்டுக்குச் சென்றுள்ள தூதர்கள்வருவதற்காக காத்திருக்கிறோம்.
எங்கள் விரைவில் திரும்பி வருவார் என நம்புகிறோம். இந்த நம்பிக்கையில் நாங்கள்வெகுநாட்களாக காத்திருக்கிறோம் என கூறினார்.












Click it and Unblock the Notifications