பலத்த பாதுகாப்புக்கிடையே ஸ்ரீமாவோ உடல் அடக்கம்

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

முன்னாள் இலங்கைப் பிரதமரும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உலகின் முதலாவதுபிரதமருமான ஸ்ரீமாவோ பண்டாரநாயகேவின் உடல் சனிக்கிழமை முழு அரசுமரியாதைகளுடன் அடக்கம் செய்யப்பட்டது.

ஸ்ரீமாவோவின் விருப்பப்படியே, அவரது சொந்த பண்ணை வளாகத்தில், கணவர்சாலமன் பண்டாரநாயகேவின் கல்லறைக்கு அருகிலேயே அடக்கம் செய்யப்பட்டது.சாலமன் பண்டாரநாயகே 1959-ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார் என்பதுகுறிப்பிடத்தக்கது.

ஸ்ரீமாவோவின் உடல் பலத்த பாதுகாப்புக்கிடையே கல்லறைக்கு எடுத்துச்செல்லப்பட்டது. உடல் எடுத்துச் செல்லப்பட்ட பாதை எங்கும் மக்கள் நின்றிருந்துகண்ணீர் அஞ்சலி செலுத்தினர். இறுதிச் சடங்கில் ஸ்ரீமாவோவின் மகளும்,அதிபருமான சந்திரிகா குமாரதுங்கா, உறவினர்கள், மதத் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

இந்திய துணை ஜனாதிபதி கிருஷ்ண காந்த் அவரது மனைவியுடன் இறுதிச் சடங்கில்கலந்து கொண்டார். பல நாடுகளின் பிரதிநிதிகளும் இதில் கலந்து கொண்டனர்.ஹோரகல்லா வலனுவா என்ற இடத்தில் இறுதிச் சடங்கு நடந்தது.

ராணுவ டிரக்கில் எடுத்துச் செல்லப்பட்ட ஸ்ரீமாவோவின் உடல் 19 துப்பாக்கிக்குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டது.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+