வாஜ்பாய்க்கு கிளிண்டன் வாழ்த்து

Subscribe to Oneindia Tamil

மும்பை:

அமெரிக்க அதிபர் பில் கிளின்டண் வாஜ்பாய் விரைவில பரிபூரண குணமடையவாழ்த்து தெரிவித்துள்ளார்.

வாஜ்பாய் மூட்டு வலியால் அவதிப்ட்டு வந்தார். அதனால் அவருக்கு இடது காலில்மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த அறுவவை சிகிச்சைமும்பையில் உள்ள ப்ரீச்கன்டி மருத்துவமனையில் 10-ம் தேதி நடந்தது.

அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. வாஜ்பாய் உடல்நிலையும் நன்கு தேறிவருகிறது. அறுவை சிகிச்சைத்க்குப் பின் வழங்கப்படும் பிசியோதெரபி பயிற்சிகள்தொடர்ந்து நடை பெற்று வருகின்றன.

இதற்கிடையே அமெரிக்க அதிபர் கிளிண்டன் வாஜ்பாய்க்கு வாழ்த்துத்தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில், மூட்டு வலியால்அவதிப்பட்ட போதும் வாஜ்பாய் அமெரிக்க பயணத்தை வெற்றிகரமாக முடித்தார்.அது பாராட்டுக்குரியது. அவர் விரைவில் குணமடைய வாழத்துகிறேன் எனதெரிவித்துள்ளார்.

பூடான் மன்னர் ஜிகமெசிங்யே வாங்சுக், நேபாள பிரதமர் கொய்ராலா, அல்ஜேரியபிரதமர் ஆகியோரும் பிரதமர் விரைவில் குணமடைய வாழ்த்துச் செய்திஅனுப்பியுள்ளனர்.

நடந்தார்:

பிரதமர் வாஜ்பாய் உடல்நிலையில் தொடர்ந்து நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது .அவர் ஊன்று கோல் உதவியுடன் நடந்தார் என அவருக்குக்கு அறுவை சிகிச்சை செய்தமருத்துவர் ரனவத் தெரிவித்துள்ளார்.

வாஜ்பாய் உடல்நிலை குறித்து டாக்டர் ரணவத் அறிக்கை வெளிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் அவர், வாஜ்பாய் பயிற்சியாளர் மற்றும் ஊன்றுகோல் உதவியுடன்சில அடிகள் நடந்தார். அவர் தற்போது சாதரணமான உணவுகளை உட்கொண்டுவருகிறார். அவர் உடல் நிலை தொடர்ந்து முன்னேற்றம் அடைநத்து வருகிறது. அவரதுஉடல் உறுப்புகளும் நல்ல நிலையில் இயங்கி வருகின்றன என தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+