ஜெ. வேஷம் இனி எடுபடாது .. வாழப்பாடி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஜெயலலிதா இனி எந்த வேஷம் போட்டாலும் மக்கள் மத்தியில் அது எடுபடாது என்றுதமிழக ராஜீவ் காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராம

சென்னையில் அவர் அளித்த பேட்டி:

நரசிம்மராவுக்கும், ஜெயலலதாவுக்கும் 3 ஆண்டு சிறை தண்டனைஅளிக்கப்பட்டுள்ளதை "லேண்ட்மார்க் ஜட்ஜ்மென்ட் என்று சொல்லலாம். உச்சநீதிமன்றம் வரை மேல் முறையீடு செய்ய வாய்ப்பு இருந்தாலும் இருவரும் தேர்தலில்போட்டியிடும் தகுதியை இழக்கிறார்கள். இது மற்ற அரசியல்வாதிகளுக்குகொடுக்கப்பட்டிருக்கும் எச்சரிக்கை.

ஒரு அரசியல்வாதி மேல் முறையீட்டை நம்பி அரசியல் நடத்த முடியாது. மக்களைநம்பித்தான் அரசியல் நடத்த வேண்டியதிருக்கிறது. இதனால் ஜெயலலிதா இனி எந்தவேஷம் போட்டாலும், மக்கள் மத்தியில் எடுபடப் போவதில்லை.

இத்தீர்ப்புக்கு பிறகு ஜெயலலிதாவை வைத்து அரசியல் ஆதாயம் தேடநினைப்பவர்கள் கூட ஜெயலலிதாவைப்பார்த்து முகம் சுளிக்கக் கூடிய அளவில் தான்சூழ்நிலை உள்ளது. எனவே ஜெயலலிதாவின் அரசியல் ரீதியான எதிர்காலம் முடிவுக்குவந்து விட்டது. அதில் எந்த மாற்றமும் இல்லை.

சில தொண்டர்கள் இத்தனைக்கும் காரணம் சசிகலா தான் என்று நினைக்கிறார்கள். கட்சிஎம்.ஜி.ஆர். போட்ட விதை என்பதாலும், அவரது இரட்டை இலை சின்னத்திற்காகவும்தான் தொண்டர்கள் இன்னும் அக்கட்சியிலேயே இருக்கிறார்கள்.

ஜெயலலிதா வழக்கையும், நரசிம்மராவ் வழக்கையும் ஒன்றாக சித்தரிக்க முடியாது.நரசிம்மராவ் லஞ்சம் கொடுத்து ஆட்சியைக் காப்பாறி அதன் பிறகு லஞ்சம் வாங்கிக்கொண்டார். ஜெயலலிதாவோ மக்கள் தீர்ப்பை வைத்து ஊழல் செய்தார். நரசிம்மராவ்,பூட்டாசிங் போன்றவர்களின் ஊழலுக்கு துணைபோவது போல் காங்கிரஸ் மவுனமாகஇருக்கிறது என்றார் வாழப்பாடி ராமமூர்த்தி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+