சென்னையில் பேரணி நடத்துகிறார் வி.பி.சிங்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகளைக் கண்டித்து முன்னாள் பிரதமர்வி.பி.சிங் தலைமையில் மதச் சார்பற்ற ஜனதாதள கட்சியின் சார்பில் சென்னையில்நவம்பர் 26-ம் தேதி பேரணி மற்றும் பொதுக் கூட்டம் நடத்தப்படும் என்று முன்னாள்பிரதமர் தேவெ கெளடா கூறியுள்ளார்.

சென்னைக்கு ஒரு நாள் பயணமாக வெள்ளிக்கிழமை வந்த தேவெ கெளடா, பெரியார்திடலில் நடந்த கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டார். கூட்டத்தில்அவர் பேசுகையில், தமிழக அரசியலில் இரண்டு கட்சிகள்தான் பெரியவை.

திமுக மற்றும் அதிமுக. இதில், திமுக கட்சி, மதவாத பாரதீய ஜனதாக் கட்சியின்கூட்டணியில் உள்ளது. எனவே நாம் அதில் சேர முடியாது. அதிமுக கூட்டணியில்தான்இருக்க வேண்டியுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது விதிக்கப்பட்டுள்ள தண்டனைகுறித்துக் கருத்துத்தெரிவிக்க விரும்பவில்லை. இருப்பினும் தேர்தல் நெருங்குகிற சமயத்தில்,அரசியல்வாதிகள் மீது இதுபோல வழக்குகளை நெருக்குவது ஏன் என்றுதெரியவில்லை. மக்கள் இதைப் பார்த்துக் கொள்வார்கள் என்றார் கெளடா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+