யுவராஜ் என்றொரு இளவரசன்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

Yuwaraj Singhயுவராஜ் சிங் - இந்திய கிரிக்கெட்டுக்கு கிடைத்துள்ள புதிய இளவரசன்.

கென்யாவில் நடைபெற்று வரும் ஐ.சி.சி. நாக்-அவுட் கிரிக்கெட் போட்டித் தொடரில்தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக வெள்ளிக்கிழமை நடைபெற்ற அரையிறுதிஆட்டத்தில் அவர் ஆடிய ஆட்டம் புதிய இளவரசனின் வரவை உலகுக்கு அறிவித்தது.

அந்த ஆட்டத்தில் 35 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 41 ரன்கள் குவித்ததும், 4 ஓவரில்15 ரன்களை விட்டுக் கொடுத்து ஜான்டி ரோட்ஸின் விக்கெட்டை வீழ்த்தியதும்குறிப்பிடத்தக்கது.

ஏற்கெனவே கால் இறுதியில் உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவுக்கு எதிரானஆட்டத்தில் 84 ரன்கள் எடுத்து ஆட்ட நாயகன் விருதையும் பெற்றார். யுவராஜ் எடுத்த84 ரன்கள், ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய வீரர் ஒருவர் தனது முதல் ஆட்டத்தில்எடுத்த அதிகபட்ச ஸ்கோர் ஆகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தான் பங்கேற்று விளையாடிய இரண்டு ஆட்டங்களின் மூலம் தான் ஒரு சிறந்தஆட்டக்காரர் என்பதையும், இந்தியாவுக்குக் கிடைத்துள்ள மற்றொரு நம்பிக்கைநட்சத்திரம் என்பதையும் அவர் வெளிப்படுத்தி விட்டார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீன் தனது முதல் மூன்று டெஸ்ட்போட்டிகளில் தொடர்ந்து மூன்று சதங்கள் அடித்து சாதனை படைத்தார். அதேபோல்,இந்திய அணிக்காக ஆடத் தொடங்கியது முதல் இன்றுவரை உலகின் சிறந்தபேட்ஸ்மேனாத் திகழும் டெண்டுல்கரும் பலவித சாதனைகளைப் படைத்துள்ளார்.

அசாருதீன், டெண்டுல்கர் இருவரும் தாங்கள் புரிந்த சாதனைகளின்போது எவ்வாறுபாராட்டப்பட்டனரோ, எவ்வாறு அவர்களுக்குப் புகழ்மாலைகள் கிடைத்தனவோஅந்த அளவுக்கு யுவராஜ் சிங்கும் தனது சிறப்பான ஆட்டத்துக்காகக் புகழப்படுகிறார்.

உலகின் சிறந்த கிரிக்கெட் வீரர்கள் என்று கூறப்படும் இந்தியாவின் முன்னாள் கேப்டன்சுனில் கவாஸ்கர், யுவராஜ் சிங்கின் ஆட்டத்தைப் புகழ வார்த்தைகளே இல்லை என்றுகூறியுள்ளார்.

Yuwarajsinghஅவரைத் தவிர இயான் சேப்பல், ஜெஃப்ரி பாய்காட் ஆகியோரும் யுவராஜ் சிங்கின்ஆட்டத்தைப் புகழ்ந்து பாராட்டியுள்ளனர். டெண்டுல்கருக்குப் பிறகு நான் பார்த்தசிறந்த திறமையான ஆட்டக்காரர் யுவராஜ் என்று கூறியுள்ளார் இந்திய அணியின்முன்னாள் கேப்டன் திலீப் வெங்சர்கார்.

யுவராஜ் சிங் சிறந்த ஆட்டக்காரர். எங்களது பந்துவீச்சாளர்களை அவர்சின்னாபின்னமாக்கிவிட்டார். அவரை அவுட்டாக்க நாங்கள் எவ்வளவோ முயற்சிசெய்தோம். எளிதில் அவர் அவுட்டாகவில்லை. எதைப்பற்றியும் அவர்கவலைப்படவில்லை. அவரது பேட்டே எல்லாவற்றையும் சொல்லிவிட்டது என்றுபுகழாரம் சூட்டியுள்ளார் ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்டீவ் வாவ்.

தற்போது இந்திய ரசிகர்களிடையே யுவராஜ் சிங் ஒரு சாதனை நாயகராகஉயர்ந்துள்ளார். டெண்டுல்கர், டெண்டுல்கர் என்று புகழ்பாடியவர்கள் எல்லாம்இப்போது யுவராஜ், யுவராஜ் என்று பாடத் தொடங்கியுள்ளனர்.

டெண்டுல்கர் அவுட்டாகிச் சென்றுவிட்டால் இந்தியா அவ்வளவுதான். அடுத்து வரும்ஆட்டக்காரர்களும் தொடர்ந்து அவுட்டாகிச் சென்றுவிடுவார்கள் என்று கருதப்பட்டுவரும் நிலை இனி ஏற்படாது.

டெண்டுல்கர் போனால் என்ன அடுத்து யுவராஜ் சிங் இருக்கிறார் என்றுநம்பிக்கையோடு இந்திய ரசிகர்கள் கூறும் அளவுக்கு தனது ஆட்டத்தால் ரசிகர்களையுவராஜ் கட்டிப் போட்டுள்ளார் என்றால் அது மிகையில்லை.

இரண்டு ஆட்டங்களிலேயே இத்தகைய சாதனையைப் புரிந்துள்ள 19 வயதானயுவராஜ், தொடக்க காலத்தில் முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொள்ள சற்றுசிரமப்படவேண்டியதாயிற்று.

யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங்கும் இந்திய அணியின் முன்னாள் வீரர்தான்.அவர் தனது சக்திக்கு ஏற்ற வகையில் யுவராஜ் சிங் கிரிக்கெட் விளையாடுவதற்கானவசதிகளை ஏற்படுத்தித் தந்தார்.

ஆனால், யுவராஜ் சிங்குக்கு ஸ்கேட்டிங் விளையாட்டில்தான் ஆர்வம். இதைப்பற்றியோக்ராஜ் சிங்கின் நண்பர்களும், யுவராஜ் சிங்கின் நண்பர்களும் எடுத்துக் கூறியதைஅடுத்து யுவராஜ் சிங்கிடம் யோக்ராஜ் பேசினார்.

கிரிக்கெட் விளையாட்டைப் பற்றி மகனிடம் தந்தை பலமுறை, பல மணி நேரம்பேசினார். இறுதியில் மனம் மாறினால் யுவராஜ். கிரிக்கெட் விளையாட்டில் அதிகம்ஆர்வம் காட்டினார். இப்போது ஜெயித்துக் காட்டிவிட்டார்.

ஸ்கேட்டிங்கிலும் யுவராஜ் சிங் சோடைபோனதில்லை. ஆசிய சாம்பியன்ஷிப்போட்டியில் அவர் தங்கப் பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

19 வயதுக்குட்பட்டோருக்கான கூச்பிகார் டிராபி கிரிக்கெட் போட்டியிலும், ஹரியானாரஞ்சி கோப்பை அணியிலும் விளையாடியுள்ளார் யுவராஜ். தொடக்கத்தில் சரிவுஏற்பட்டாலும், பிறகு சுதாரித்து ஆடி தனது திறமையைக் காட்டி விளையாடி இந்தியஅணியில் இடம் பெற்றார்.

இந்திய அணியில் இடம் பிடிப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்தது 19வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பைப் போட்டியில் அவரது ஆட்டம்தான்.இப் போட்டியில் இந்தியா உலகக் கோப்பையை வென்றது.

இதில் யுவராஜ் சிங் 203 ரன்களும் 12 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். மேலும்,தொடர் நாயகன் விருதையும் யுவராஜ் சிங் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.டெஸ்ட் போட்டிகளை விட ஒருநாள் போட்டிகளில்தான் அதிகம்விளையாடவேண்டும் என்பதுதான் யுவராஜ் சிங்கின் விருப்பம்.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+