கங்குலி சதம்: ஐ.சி.சி. கோப்பையை வெல்லுமா இந்தியா?

Subscribe to Oneindia Tamil

நைரோபி:

ஐ.சி.சி. நாக்-அவுட் கிரிக்கெட் போட்டித் தொடரின் இறுதி ஆட்டத்தில் முதலில் பேட்செய்த இந்தியா 264 ரன்கள் எடுத்துள்ளது.

நைரோபியில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் நியூசிலாந்து டாஸ் வென்றுஇந்தியாவை பேட் செய்யும்படி கேட்டுக் கொண்டது.

வழக்கம்போல் கங்குலியும், டெண்டுல்கரும் களமிறங்கினர். தொடக்கம் முதலேஇருவரும் அதிரடி ஆட்டம் ஆடினர். குறிப்பாக டெண்டுல்கர் சிறப்பாக ஆடினார்.

அவர் 13 ரன்கள் எடுத்தபோது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்கள் அடித்தவீரர் என்ற பெருமையைப் பெற்றார். கங்குலியும், டெண்டுல்கரும் முதல்விக்கெட்டுக்கு 141 ரன்கள் சேர்த்தனர்.

இருவரும் ஆடிய ஆட்டம் இந்தியா நிச்சயம் 300 ரன்களைக் கடந்துவிடும் என்றஎதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால், 69 ரன்கள் எடுத்த நிலையில்துரதிருஷ்டவசமாக டெண்டுல்கர் ரன் அவுட்டானார்.

அடுத்து வந்த திராவிட், கங்குலியுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் மெல்லமெல்லரன்கள் சேர்த்தனர். ஆனால், தொடக்க ஓவர்களில் 6 ரன்களுக்கும் அதிகமாக இருந்தரன் விகிதம் குறையத் தொடங்கியது.

இந் நிலையில், 22 ரன்கள் எடுத்த நிலையில் திராவிடும் ரன் அவுட்டானார்.இதற்கிடையே, கேப்டன் கங்குலி தனது சதத்தைப் பூர்த்தி செய்தார். இத் தொடரில்அவர் அடித்த இரண்டாவது சதம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

கங்குலி 117 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். அடுத்த வந்த நம்பிக்கைநட்சத்திரம் யுவராஜும் தன் பங்குக்கு விளையாடி 19 பந்துகளில் 19 ரன்கள் எடுத்துஅவுட்டானார்.

வினோத் காம்ளி 1 ரன்னும், ராபின் சிங் 13 ரன்களும் எடுத்தனர். அகார்கர் 15 ரன்எடுத்தும், தய்யா 1 ரன் எடுத்தும் அவுட்டாகாமல் இருந்தனர்.

கடைசியாக ஆட வந்தவர்கள் யாரும் குறிப்பிடும்படியாக விளையாடவில்லை.இதனால், 300 ரன்களுக்கும் குறைவாகவே 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 264ரன்களுக்கு இந்தியா ஆட்டமிழந்தது.

நியூசிலாந்து அணியில் ஸ்டைரிஸ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+