ராஜ்குமாருடன் வருகிறேன் - நெடுமாறன் தகவல்
சென்னை:
கன்னட நடிகர் ராஜ்குமாரை மீட்டுக் கொண்டு ஞாயிற்றுக்கிழமை இரவு வருகிறேன்என்று வீரப்பனிடம் தூதராகச் சென்ற தமிழ் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன்கேசட் மூலம் தகவல் அனுப்பியுள்ளதாக சன் டிவி செய்தியில் தெரிவிக்கப்பட்டது.
சன் டிவியில் ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பான செய்தியில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக, காட்டிலிருந்து வெளியே வரும் ராஜ்குமாரை அழைத்து வர தலமலையில்ஒரு ஆம்புலன்ஸ் தயாராக வைக்கப்பட்டுள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள்தெரிவித்தன.
ராஜ்குமாரை தலமலைப் பகுதிக்குக் கொண்டு வந்து அங்குதான் வீரப்பன்விடுவிப்பான் என்று கருதப்படுவதால் அங்கு ஆம்புலன்ஸ் தயாராகவைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
வீரப்பனிடமிருந்து விடுவிக்கப்படும் ராஜ்குமார், தலமலையில் உள்ள விருந்தினர்மாளிகையில் தங்கவைக்கப்பட்டு சிறிது நேரத்துக்குப் பிறகு சென்னைக்கு அழைத்துச்செல்லப்படுவார் என்று கருதப்படுகிறது.
அதே நேரத்தில் தலமலை காட்டுப்பகுதியிலிருந்து நேரடியாக ராஜ்குமாரைச்சென்னைக்குக் கொண்டு செல்வதற்காக ஒரு ஹெலிகாப்டரும் தயாராக வைக்கும்படிகேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், நக்கீரன் கோபால் உள்பட 4 பேர்சில நாட்களுக்கு முன் காட்டுக்குள் சென்று சந்தனக் கடத்தல் வீரப்பனிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இப்பேச்சுவார்த்தையின் முடிவில் ராஜ்குமாரையும் மற்றவர்களையும் விடுவிக்கவீரப்பன் ஒப்புக் கொண்டதாகவும், ஞாயிற்றுக்கிழமை இரவு அவர்கள்விடுவிக்கப்படலாம் என்றும் கருதப்படுகிறது.
முன்னதாக ஞாயிற்றுக்கிழமை காலை காட்டியிலிருந்து செய்தி அனுப்பிய பழ.நெடுமாறன், இரவுக்குள் நல்ல தகவலைத் தெரிவிப்பதாகத் தெரிவித்திருந்தார் என்பதுகுறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications