பாலக்காட்டில் மின்னல் தாக்கி 6 பேர் சாவு

Subscribe to Oneindia Tamil

பாலக்காடு:

கேரள மாநிலம் பாலக்காட்டில், விமானப் படை வீரரின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட 6 பேர் மின்னல் தாக்கி இறந்தனர்.

பாலக்காட்டிலிருந்து 35 கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஸ்ரீகிருஷ்ணாபுரம் என்றஇடத்தில் இந்த பரிதாபச் சம்பவம் ஞாயிற்றுக்கிழமை நடந்தது.

விமானப்படை வீரர் ஸ்குவாட்ரன் லீடர் மோகன் குமார் என்பவரின் இறுதிச் சடங்குஞாயிற்றுக்கிழமை நடந்தது. அதில் அப்பகுதியைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.

இறுதிச் சடங்கு முடிந்தவுடன் அனைவரும் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போதுநல்ல மழை பெய்து கொண்டிருந்தது. இந்த நிலையில் பெரும் மின்னல் அவர்களைத்தாக்கியது. இதில் ஹரிதாஸ் (38), ராமன் (44), வாசு (48), ஈரா (38), ராமச்சந்திரன் (25),எம்.சி.ராமச்சந்திரன் (33) ஆகியோர் கருகி இறந்தனர். 14 பேர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.அவர்களை மாநில நிதித்துறை அமைச்சர் சிவதாச மேனன் சென்று பார்த்து ஆறுதல்கூறினர். இறந்தவர்களுடைய குடும்பத்தினருக்கு உடனடியாக ரூ. 10,000 பணமும்,காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 2000 பணமும் வழங்க மாநில அரசுஉத்தரவிட்டுள்ளது.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+