ராஜ்குமாரை மீட்க மத்திய அரசு உதவத் தயார் - அத்வானி
மனேசார் (கர்கோவன்):
சந்தனக் கடத்தல் வீரப்பன் பிடியிலிருந்து கன்னட நடிகர் ராஜ்குமாரை மீட்கஎந்த உதவியையும் அளிக்க மத்திய அரசு தயாராக உள்ளது என்று மத்தியஉள்துறை அமைச்சர் எல்.கே. அத்வானி தெரிவித்தார்.
மனேசாரில் தேசிய பாதுகாப்புப் படையின் தொடக்க நாள் நிகழ்ச்சியில்கலந்து கொண்ட பிறகு நிருபர்களிடம் திங்கள்கிழமை அவர் கூறியதாவது:
சந்தனக் கடத்தல் வீரப்பனால் கன்னட நடிகர் ராஜ்குமார் உள்பட சிலர்கடத்தப்பட்டு 2 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இன்னும் அவர்கள்மீட்கப்படவில்லை.
இந் நிலையில் ராஜ்குமாரை மீட்க தமிழக அரசும், கர்நாடக அரசும் உதவிகேட்டால் உடனடியாக உதவி செய்த மத்திய அரசு தயாராக உள்ளது.
ராஜ்குமாரை மீட்க இரு மாநிலங்களும் தங்களால் முடிந்தநடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. தொடர்ந்து அம் மாநிலஅரசுகளுடன் தொடர்பு கொண்டு நிலைமை அவ்வப்போது தெரிந்துவருகிறேன்.
எந்த நேரத்தில் எந்த வகையான உதவியையும் இரு மாநிலங்களும்கேட்டால் அதை உடனே வழங்க மத்திய அரசு தயாராக உள்ளது. ஆள்கடத்தல், விமானக் கடத்தல் போன்ற பிளாக்மெயில்கள் குறித்து தேசியஅளவில் கொள்கை உருவாக்கப்படவேண்டும்.
இது தொடர்பாக முதல்வர்கள் மாநாடு நடத்தப்படவேண்டும். மேலும் இதுதொடர்பாக மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் ஒருமித்த கருத்துஉருவாகவேண்டுமே தவிர சட்டம் இயற்றவேண்டிய அவசியமில்லைஎன்றார் அத்வானி.
யு.என்.ஐ.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications