தேசீய மலரு க்கு அவமானமா- குமுறுகிறார் குமரியார்
தூத்துக்குடி:
தேசீய மலரான தாமரையை பாரதீய ஜனதா கட்சி சின்னமாக பயன்படுத்தக்கூடாது என்று குமரி அனந்தன் கூறினார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் குமரி அனந்தனின் பொது வாழ்வு பொன் விழா தூத்துக்குடியில்கொண்டாடப்பட்டது. பாலவிநாயகர் கோவில் தெருவில் நடந்த இந்த விழாவுக்கு பாண்டிச்சேரி முதலமைச்சர் சண்முகம் தலைமைதாங்கினார்.
விழாவில் பேசிய குமரி அனந்தன், எனது வாழ்கை முழுவதும் தமிழ் மக்களுக்காகவும், காங்கிரஸ் இயக்கத்துக்காவும் பாடுபட்டுவந்துள்ளேன். தொடர்ந்து தமிழக மக்களுக்காகவும், காங்கிரஸ் பேரியக்கத்துக்காவும் என்னை நானே அர்பணித்துக்கொள்வேன்.
பாராளுமன்றத்தில் தமிழில் பேசுவதற்கு அனுமதி பெற்றுத்தந்தவன் நான். அத்துடன் எனது கோரிக்கையினால்தான் கன்னடம்,ஒரியா, வங்காளம், தெலுங்கு, மலையாளம் போன்ற மாநில மொழிகளிலும், பேசுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
நமது நாட்டில் மயிலையும், புலியையும் அரசியல் கட்சிகள் உள்பட அனைவரும் எதிலும் பயன்படுத்தக்கூடாது. ஏனென்றால்மயில் தேசிய பறவை. புலி தேசீய விலங்கு. இவற்றை எதிலாவது பயன்படுத்தினால் அது தேசத்தை அவமதிப்பது போன்றதாகும்.
நமது நாட்டின் தேசீயமலர் தாமரையாகும். சுதேசியம் பேசுகிறவர்கள் இந்த தாமரையான தேசீய மலரை தங்களது அரசியல்கட்சியின் சின்னமாக வைக்கலாமா? இது நமது தேசத்தை அவமதிப்பதாகாதா? எனவே பாரதீய ஜனதா கட்சியினர் தேசீயமலரான தாமரையை தங்களது தேர்தல் சின்னமாக பயன்படுத்தக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன்.
தேசீய சின்னத்திலேயே முத்திரை குத்தி நாம் அதை அவமதிக்கலாமா? காமராஜர் வழியில் எனது அரசியல் பொது வாழ்வைநடத்தி வரும் நான் அதே பாதையில் தொடர்ந்து நடப்பேன். இதற்கு தேசியவாதிகள் அனைவரும் ஆதரவும், ஆசியும் வழங்கவேண்டும்.
இவ்வாறு குமரி அனந்தன் பேசினார்.
-
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள்












Click it and Unblock the Notifications