வெடிகுண்டு வைத்திருந்தவர்களுக்கு 4 ஆண்டு சிறை
கோவை:
வெடிகுண்டு பதுக்கி வைத்திருந்த வழக்கில், இரண்டு பேருக்கு நான்கு ஆண்டுகள்கடுங்காவல் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த 1993ம் ஆண்டு டிசம்பர்மாதம் 6- ம் தேதி கோவையில் கலவரம் ஏற்படுத்த ஒரு கும்பல் திட்டமிட்டது.இதற்காக வெடிகுண்டுகள் தயார் செய்யப்படுவதாக உளவுப் பிரிவு போலீசாருக்குத்தகவல் கிடைத்தது.
இதையடுத்து, போலீசார் பல இடங்களில் கடும் சோதனை மேற்கொண்டனர்.அப்போது டிசம்பர் 1-ம் தேதி வெடிகுண்டுகள் தயார் செய்யத் தேவையானமருந்துகள், மற்றும் ஜெலட்டின் குச்சிகள், சல்பர் உட்பட பெட்ரோல் வெடிகுண்டுகளைஉருவாக்கத் தேவைப்படும் பொருட்களைப் போலீசார் கைப்பற்றினர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து 14 பேரைக் கைது செய்தனர். இந்தவழக்கு கோவை முதன்மை உதவி அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது.
இந்த வழக்கில் வெடிகுண்டுகள் பதுக்கி வைத்திருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட 14பேரில் கோவை குனியத்தூரைச் சேர்ந்த நாகூர் மீரான், சுண்டக்காத்தூரைச் சேர்ந்தஅப்துல் ரஹ்மான் ஆகிய இருவர் மீதும் குற்றம் நிரூபிக்கப்பட்டது. இருவருக்கும் தலாநான்கு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து நீதிபதி பொன்னுச்சாமிதீர்ப்பளித்தார்.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications