ராஜ்குமாரை மீட்க காடு செல்லத் தயார் ..இளங்கோவன்
சென்னை:
ராஜ்குமாரை மீட்க காட்டுக்குச் செல்லத் தயார் என்று தமிழக காங்கிரஸ் தலைவர்இளங்கோவன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னையில் புதன் கிழமை அவர் அளித்த பரபரப்பான பேட்டி:
கன்னட நடிகர் ராஜ்குமாரை மீட்க நெடுமாறனை அரசு தூதராக அனுப்பியது தவறுஎன்றபோதிலும், ராஜ்குமார் மீட்கப்படுவார் என்ற நல்ல எண்ணம் காரணமாக அமைதியாகஇருந்தேன்.
இந்த பிரச்னை தொடர்பாக சர்வ கட்சி கூட்டத்தை தமிழக முதல்வர் கூட்ட வேண்டும் என்றுநாங்கள் வலியுறுத்தி வருகிறோம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இதைஆதரித்துள்ளது.
கர்நாடக அரசு இதுவரை மூன்று முறை சர்வ கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது. ராஜ்குமார்மீட்கப்படுவார் என்ற நம்பிக்கையில் இருந்தோம். ஆனால், அது நடக்கவில்லை. எனவேமுதல்வர் கருணாநிதி தயக்கமின்றி நல்ல காரியம் நடக்க வேண்டும் என்ற எண்ணத்தில்அ.தி.மு.க. உள்ளிட்ட அனைத்துக் கட்சிக்கூட்டத்தை கூட்ட வேண்டும்.
வீரப்பனை சந்திக்க சர்வக் கட்சிக் குழு ஒன்றை காட்டிற்குள் அனுப்ப வேண்டும். இந்தகுழுவில் காங்கிரஸ் சார்பில் நான் செல்லத் தயாராக இருக்கிறேன்.
டெல்லியில் சோனியா காந்தியை சந்தித்து தமிழக அரசியல் நிலவரம் குறித்துப் பேசினேன்.டான்சி தீர்ப்புக்கு பிறகு உள்ள நிலைமை குறித்தும் விவாதித்தேன். மூன்றாவது அணியோசனை பற்றியும் அவரிடம் விளக்கினேன்.
எனினும் அ.தி.மு.க.வுடன் தற்போது உள்ள கூட்டணியில் எந்த மாற்றமும் இல்லை.கூட்டணி தொடருமா என்பதை சோனியா முடிவு செய்வார்.
கடந்த ஒரு மாதமாக பா.ம.க. தலைவர் ராமதாஸ் குழம்பிய நிலையில் உள்ளார். அவர்தெளிவான முடிவை சொன்னால் அதுபற்றி எங்கள் கருத்தை கூற முடியும். அ.தி.மு.க.அணிக்கு பா.ம.க. வருவது பற்றி அவரது பேச்சில் தெளிவு இல்லை..
மதுரையில் அடுத்த மாதம் நடைபெறும் காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் சோனியாபேசுகிறார் என்றார் இளங்கோவன்.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications