இஸ்ரேல் சென்றதன் நினைவு நாளைக் கொண்டாடிய கேரள யூதர்கள்
ஜூடியன் ஹில்ஸ் (இஸ்ரேல்):
யூதர்களின் புனித பூமியாகக் கருதப்படும் இஸ்ரேலுக்குக் குடிபெயர்ந்து சென்றதன்நினைவு நாளை கேரளத்தைச் சேர்ந்த யூத மக்கள் கொண்டாடினர்.
இக் கொண்டாட்டம் நடைபெற்றது கேரளத்தில் அல்ல, இஸ்ரேலில். கேரளத்தில் வசித்துவந்த யூதர்கள் பல ஆண்டுகளுக்கு முன் தங்களது புனித பூமியான இஸ்ரேலுக்குக்குடிபெயர்ந்து சென்றனர். இந் நினைவு நாளை அவர்கள் சிறப்பாகக் கொண்டாடினர்.இவர்கள் அனைவரும் இஸ்ரேலியர்களின் ஹீப்ரு மொழி பேசக் கூடியவர்கள்.
சுமார் 6 ஆயிரத்துக்கும் அதிகமான அவர்கள் ஜெருசலத்துக்கு அருகேயுள்ள இட்சாக்ரபின் பார்க்கில் கூடினர். இக் கொண்டாட்டத்தில் உள்ளூரைச் சேர்ந்த யூத மக்களும்அதிகமான அளவில் கலந்து கொண்டனர். இட்சாக் ராபின் பார்க் என்ற இடத்தில்தான்50 ஆண்டுகளுக்கு முன் இஸ்ரேலுக்கு விடுதலை கோரி யூதர்கள் போராட்டம்நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆகவே, கேரளத்தைச் சேர்ந்த யூதர்கள் தாங்கள் குடிபெயர்ந்து வந்ததன் நினைவுநாளை அங்கே கொண்டாட முடிவு செய்து அங்கே கூடினர். வழக்கமான இஸ்ரேலியபாரம்பரியத்துடன் அவர்கள் கொண்டாடினர்.
அதே நேரத்தில் அக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட ஆண்கள் எல்லாம் இந்தியஉடையை அணிந்திருந்தனர். சிகப்பு மற்றும் மஞ்சள் வண்ணங்கள் கொண்டஆடைகளை அவர்கள் அணிந்திருந்தனர்.
இக் கொண்டாட்டத்தில் இஸ்ரேலுக்கான இந்தியத் தூதர் ரஞ்சன் மதாய் கலந்துகொண்டார். கேரளத்தில் பிறந்தவரான இவர், நிகழ்ச்சியில் மலையாளத்திலேயேபேசினார் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் ஆங்கிலம் மற்றும் யூதர்களின்மொழியான ஹீப்ருவிலும் அவர் பேசினார்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications