ராணுவ முகாம் மீது புலிகள் தாக்குதல்: ஒருவர் பலி
கொழும்பு:
வட இலங்கையில் வவுனியா-மன்னார் சாலையில் ராணுவ முகாம் மீது விடுதலைப் புலிகள் கடும் தாக்குதல் நடத்தினர்.இதில் குறைந்தபட்சம் ஒரு ராணுவ வீரர் கொல்லப்பட்டார்.
வீரர்கள் திருப்பித் தாக்கியதில் ஒரு விடுதலைப் புலி கொல்லப்பட்டார். ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,பெரெயன்குளம் சந்திப்பில் உள்ள ராணுவ முகாமின் மீது புதன்கிழமை காலை 6.30 மணிக்கு புலிகள் தாக்குதல்தொடுத்தனர்.
தாக்குதல் நடந்தபோது 5 ராணுவ வீரர்கள் மட்டுமே முகாமில் இருந்தனர். முகாமைச் சேர்ந்த பல வீரர்கள் ரோந்துப் பணிக்குவெளியே சென்றுவிட்டனர். தாக்குதலில் முகாமின் தகவல்-தொடர்பு பாதிக்கப்பட்டுவிட்டதால், எத்தனை பேர் இறந்தனர்என்பது சரியாகத் தெரியவில்லை.
புலிகள் தாக்கியவுடன் முகாமில் இருந்த ராணுவ அதிகாரி திருப்பித் தாக்கினார். இதில் ஒரு புலி கொல்லப்பட்டார். மற்றபுலிகள் தப்பிவிட்டனர். சம்பவ இடத்திலிருந்து புலிகள் விட்டுச் சென்ற வீடியோ காமிா பறிமுதல் செய்யப்பட்டது என்றார்.
புலிகளின் தாக்குதலில் இந்த முகாமின் தகவல்-தொடர்பு முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என இலங்கை அரசு கூறியது.இது புலிகள் நடத்திய மிக மோசமான தாக்குதல் என ராணுவம் தெரிவித்தது.
நாடாளுமனறம் கூடுகிறது:
சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமனறம் புதன்கிழமை முதல்முதலாக கூட உள்ள நிலையில்புலிகள் நடத்தியுள்ள இந்தத் தாக்குதல் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது.
கொழும்பில் இருந்து 250 கி.மீ. தொலைவில் உள்ள இந்த முகாமுக்கு பிற படைப் பிரிவுகள் அனுப்பப்பட்டுள்ளன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications