தீபாவளி பாமாயிலை கடத்திய 15 பேர் கைது
சென்னை:
தீபாவளிக்காக ரேஷனில் வழங்குவதற்காக தமிழக அரசு வாங்கியஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள பாமாயிலை 6 டேங்கர்களில்ஆந்திராவுக்கு கடத்திய 15 பேர் கைது செய்யப்பட்டனர். 57 டன்பாமாயில் எண்ணெய் பறிணாதல் செய்யப்பட்டது.
தீபாவளியை ஒட்டி ரேஷன் கடைகளில் கூடுதலாக பாமாயில்வழங்குவதற்காக வெளிநாட்டில் இருந்து பாமாயில் இறக்குமதிசெய்தது தமிழக அரசு. ஆயிரம் டன்னுக்கு மேல் பாமாயில் ஏற்றிக்கொண்டு ஒரு கப்பல் சென்னை துறைமுகத்திற்கு இரண்டுநாட்களுக்கு முன்பு வந்து சேர்ந்தது.
அந்த பாமாயிலை ஆயில் டேங்கர்கள் மூலம் ஏற்றிக் கொண்டுதமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் ஏற்பாடு செய்துவைத்துள்ள தனியார் கோல்ட் ஸ்டோரேஜ் குடோன்களுக்கு கொண்டுசெல்லும் பணி நடந்து வருகிறது.
இந்த சமயத்தில் பாமாயிலை ஆந்திராவுக்கு கடத்தி விற்க ஒரு கும்பல்திட்டமிட்டுள்ள தகவல் எப்படியோ போலீசாருக்கு தெரிந்து விட்டது.தமிழ்நாடு உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் ஐ.ஜி.ராதாகிருஷ்ண ராஜா உத்தரவின் பேரில் தனிப்படையினர் சென்னை -ஆந்திரா சாலைகளில் தீவிரமாக ரோந்து வந்தனர்.
புதன் கிழமை காலையில் பொன்னேரி வழியாக சென்ற ஒருஅம்பாசிடர் கார் ஒன்றை மறித்தனர். அந்த காரை தொடர்ந்து 6டேங்கர்கள் வரிசையாக வந்தன. எல்லா வாகனத்தையும் ஓரமாகநிறுத்தச் செய்து சோதனையில் ஈடுபட்டனர்.
காரில் வந்தவர்கள் ஆந்திராவுக்கு கொண்டு செல்வதற்காகஆவணங்களை எடுத்து காட்டினர். டேங்கர்களில் உள்ளபாமாயிலுக்கான பில், அரசு அனுமதிச் சான்று என்று எல்லாம்வைத்திருந்தனர். ஆனால், போலீசாருக்கு சந்தேககம் வலுத்தது.எனவே அவர்களை அழைத்துக் கொண்டு காவல் நிலையம் வந்தனர்.
காவல் நிலையத்தில், நடத்தப்பட்ட ""வழக்கமான விசாரணையில்உண்மையை கக்கினர். அந்த ஆவணங்கள் அனைத்தும் போலிஎன்பது தெரியவந்தது.
போலி ஆவணங்களை தயாரித்து அரசுக்கு சொந்தமான பாமாயிலைஆந்திராவுக்கு கடத்தியதாக 15 பேர் கைது செய்யப்பட்டனர்.டேங்கர்களையும், காரையும் பறிதல் செய்தனர். அவர்கள்அனைவரும் அந்த கார், டேங்கர்களின் டிரைவர்கள், கிளீனர்கள்.
இந்த கடத்தலுக்கு பின்னணியில் உள்ள பெரும்புள்ளிகள் யார் என்றவிசாரணை இப்போது துரிதமாகியுள்ளது.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications