ஆந்திராவில் புயலுக்கு முந்தைய பலத்த மழைக்கு 2 பேர் பலி
ஹைதராபாத்:
ஆந்திராவில் புயலுக்கு முந்தைய பலத்த மழைக்கு 2 பேர் பலியாகியுள்ளனர். 4கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 2 லட்சம் பேர் பாதுகாப்பான இடத்துக்குஅப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாகியுள்ளது. இது ஆந்திர மாநிலம்மசூலிப்பட்டினத்துக்கு தென் கிழக்கே 200 கிலோமீட்டர் தொலைவில் மையம்கொண்டுள்ளது.
இந்த புயல் பெரும் புயலாக இருக்கும் என்றும், பலத்த மழை பெய்து பெருத்தசேதத்தை ஏற்படுத்தும் என்றும் வானிலை ஆராய்ச்சி மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
புதன்கிழமை இரவு அல்லது வியாழக்கிழமை அதிகாலை மசூலிப்பட்டினத்துக்கும்நெல்லூருக்கும் இடையே புயல் கரையைக் கடக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால்,அதற்கு முன்பே ஆந்திராவின் கடலோரப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.
விசாகப்பட்டினம் மற்றும் விஜயவாடாவில் வீடு இடிந்து விழுந்து 2 பேர்பலியாகியுள்ளனர். பலத்த மழை மற்றும் வெள்ளப் பெருக்கு காரணமாக 4 கடலோரமாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 2 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்குஅப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
மாநிலம் முழுவதும் ராணுவம் மற்றும் கடற்படைத் துருப்புக்கள் தயாராக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. அத்தியாவசி தேவைக்காக விமானப்படையின் இருஹெலிகாப்டர்கள் ஹகிம்பெட் விமானப்படை தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
5 மோட்டார் படகுகள் உள்பட 65 மீட்புப் படகுகளும், 60 நீச்சல் வீரர்களும் தயாராகவைக்கப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications