இஸ்ரேல்-பாலஸ்தீனம் போர் நிறுத்த ஒப்பந்தம்

Subscribe to Oneindia Tamil

ஜெருசேலம்:

இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டுள்ளதை அடுத்து மேற்காசியப் பகுதியில் கடந்த பல நாட்களாக நிலவிவந்த பதற்றம் சற்று தணிந்துள்ளது.

இஸ்ரேலும், பாலஸ்தீனமும் தங்கள் நாடுகளின் பொதுவான எல்லைப்பகுதியில் உள்ளநிலப்பரப்பு தொடர்பாக பல ஆண்டுகளாகச் சண்டையிட்டு வருகின்றன. இந்த சண்டைசமீப நாட்களாக தீவிரமடைந்தது.

இரு நாடுகளுக்கும் இடையேயான இச் சண்டையால் மேற்காசியாவில் பெரும் பதற்றம்நிலவியது. இரு நாடுகளுக்கும் இடையே நடந்து வந்த அமைதிப் பேச்சுவார்த்தையும்கைவிடப்பட்டது.

இதையடுத்து மேற்காசியாவில் மீண்டும் அமைதியை ஏற்படுத்த அமெரிக்க அதிபர்பில் கிளின்டனும், எகிப்து அதிபர் ஹோஸ்னி முபாரக்கும் முயற்சி மேற்கொண்டனர்.

அதன்படி எகிப்தில் உள்ள ஷாரம் எல்-ஷேக் என்ற இடத்தில் இஸ்ரேல் பிரதமர் ஈத்பாரக், பாலஸ்தீன அதிபர் யாசர் அராபத் இடையே சமரசப் பேச்சுவார்த்தைக்குஏற்பாடு செய்யப்பட்டது.

திங்கள்கிழமை இப் பேச்சுவார்த்தை தொடங்கியது. இதில் எகிப்து அதிபர் ஹோஸ்னிமுபாரக், அமெரிக்க அதிபர் பில் கிளின்டன், ஜோர்டான் மன்னர் அப்துல்லா, ஐ.நா.பொதுச் செயலாளர் கோஃபி அன்னான், ஐரோப்பிய யூனியன் வெளியுறவுத் தலைவர்சேவியர் சொலானா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இஸ்ரேல் பிரதமர் ஈத் பாரக் மற்றும் பாலஸ்தீன அதிபர் அதிபர் யாசர் அராபத்திடம்தலைவர்கள் தனித்தனியே பேச்சு நடத்தினர். இப் பேச்சுவார்த்தையின் முடிவில்போர்நிறுத்தம் செய்து கொள்ள ஈத் பாரக்கும், யாசர் அராபத்தும் ஒப்புக் கொண்டனர்.

இதையடுத்து மேற்காசியப் பகுதியில் நிலவிய பதற்றமான சூழ்நிலை தற்போதுதணிந்துள்ளது. தனது பதவிக் காலம் முடிய இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில்,பில் கிளின்டன் முன்னின்று நடத்திய பேச்சுவார்த்தையில் சுமூக முடிவுகாணப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

போர்நிறுத்த ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டதை அடுத்து காஸா பகுதியில் உள்ளவிமான நிலையத்தை மீண்டும் போக்கவரத்துக்குத் திறந்துவிடும்படி இஸ்ரேல் பிரதமர்ஈத் பாரக் உத்தரவிட்டுள்ளார். பாலஸ்தீனம் பகுதியில் உள்ள தனது துருப்புகள் நாடுதிரும்பும்படியும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

அராபத்தும், இஸ்ரேல் படையினர் மீதான தாக்குதலை நிறுத்திக் கொள்ளும்படி தனதுநாட்டுப் படையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

சண்டை தொடர்கிறது ...

இதற்கிடையே, இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் இடையே கையெழுத்திடப்படாதபோர்நிறுத்த ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டிருந்தாலும், காஸா மற்றும் ஜெருசலம்பகுதியில் தொடர்ந்து சண்டை நடந்து வருவதாகக் கூறப்படுகிறது.

பாலஸ்தீன வீரர்கள் மீது இஸ்ரேல் படையினர் ராக்கெட் குண்டுவீச்சுத் தாக்குதல் நடத்திவருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஐ.நா. சபையில் அவசரக் கூட்டம்:

மேற்காசியப் பிரச்சினை குறித்து அவசரக் கூட்டத்தைக் கூட்ட ஐக்கிய நாடுகள்சபையின் பொதுச் சபை முடிவு செய்துள்ளது.

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் இடையே போர் நிறத்த ஒப்பந்தம் ஏற்பட்டபிறகும் அங்கு சண்டை நடந்துவருவதை அடுத்து அது பற்றி விவாதிப்பதற்காக இந்தஅவசரக் கூட்டம் நடத்தப்படவுள்ளது.

அவசரக் கூட்டம் நடந்தால் மேற்காசியப் பிரச்சினை மேலும் தீவிரமாகும் என்றுஅமெரிக்காவும், ஐ.நா. பொதுச் செயலாளரும் எச்சரித்த பிறகும் இம் முடிவை ஐ.நா.சபையின் பொதுச் சபை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

3 நாளில் நிலைமை சீரடையும் - கிளின்டன் நம்பிக்கை:

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் இடையே போர் நிறுத்தம் ஒப்பந்தம்ஏற்பட்டுள்ளது. இதனால், மேற்காசியப் பகுதியில் எந்த அளவுக்கு அமைதிஏற்படுவதற்கான சூழ்நிலை உருவாகும் என்று தெரியவில்லை.

ஆனால், அடுத்த 3 நாட்களில் இரு நாடுகளுக்கும் இடையேயான போர் முடிவுக்குவரும் நம்புகிறேன் என்றார் அமெரிக்க அதிபர் பில் கிளின்டன்.

அரபு நாடுகள் தலைவர்களுடன் அல்பிரைட் பேச்சு:

மேற்காசியப் பிரச்சினை மற்றும் அப்பகுதியில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லாகொரில்லா தீவிரவாதிகளின் நடவடிக்கை பற்றி அரபு நாடுகளின் தலைவர்களுடன்அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர் மெடலின் அல்பிரைட் பேச்சு நடத்தியுள்ளார்.

சவூதி இளவரசர் அப்துல்லா, சிரிய அதிபர் பாஷர்-அல்-அஸ்ஸாட் ஆகியோருடன்அல்பிரைட் நீண்ட நேரம் பேச்சு நடத்தியதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+