எல்.டி.டி.ஈ. உறவு: நெடுமாறனைத் தவிர்க்கிறாரா கர்நாடக முதல்வர்?
பெங்களூர்:
விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாக இருப்பதால் வீரப்பனைச்சந்திக்க காட்டுக்குச் சென்ற தமிழ் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறனைச் சந்திக்க கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா தயக்கம்காட்டுவதாகக் கூறப்படுகிறது.
கன்னட நடிகர் ராஜ்குமாரை மீட்பது தொடர்பாக அரசுத் தூதர் நக்கீரன்கோபாலுடன், நெடுமாறன், பேராசிரியர் கல்யாணி, புதுவை சுகுமாறன்ஆகயோர் காட்டுக்குச் சென்று திரும்பியுள்ளனர். அவர்களால் ராஜ்குமார்மருமகன் கோவிந்தராஜுவை மட்டுமே மீட்க முடிந்தது.
காட்டுக்குச் சென்று வந்தது குறித்து கர்நாடக முதல்வர் கிருஷ்ணாவிடம்விளக்குவதற்காக கோபால், நெடுமாறன் ஆகியோர் புதன்கிழமை பெங்களூர்வருவதாக இருந்தனர்.ஆனால் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திகர்நாடகம் வருவதால் அவர்களது பயணம் ரத்து செய்யப்பட்டு விட்டதாகதெரிவிக்கப்பட்டது.
ஆனால் தூதர்களின் பெங்களூர் பயணம் ரத்துசெய்யப்பட்டதற்கு வேறுகாரணமும் இருப்பதாகக் கூறப்படுகிறது.
ஆரம்பத்திலிருந்தே நெடுமாறன் தேர்வில் கர்நாடகம் ஆர்வம் காட்டவில்லை.நெடுமாறனைத் தூதராக தேர்வு செய்தது தமிழகம்தான் நாங்கள் இல்லைஎன்று முதல்வர் கிருஷ்ணா உள்பட அனைத்துத் தரப்பினரும் கூறி வந்தனர்.அதற்குக் காரணம் நெடுமாறனின் பின்னணி.
விடுதலைப் புலிகளின் வெளிப்படையான, தீவிர ஆதரவாளர் நெடுமாறன்என்பது அனைவருக்கும் தெரிந்தது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியைக்கொன்றது விடுதலைப் புலிகள்தான் என்பது நீதிமன்றத்தில்நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்திலும் விடுதலைப் புலிகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் முதல்வராக உள்ள எஸ்.எம்.கிருஷ்ணா,நெடுமாறனைச் சந்திக்க தயக்கம் காட்டுவதாகக் கூறப்படுகிறது. இதற்குவசதியாக சோனியா காந்தியின் கர்நாடக பயணம் அமைந்தது. ரெய்ச்சூரில்நடந்த அனல் மின் நிலையத் திறப்பு விழாவில் சோனியா காந்தி கலந்துகொண்டார். அதில் பங்கேற்க கிருஷ்ணா சென்றுவிட்டார்.
கிருஷ்ணாவின் மன நிலையையே சோனியாவும் பிரதிபலித்துள்ளார்.ரெய்ச்சூர் விழாவில் அவர் பேசுகையில், தடை செய்யப்பட்ட இயக்கங்களின்பிரதிநிதிகளை தூதராக அனுப்பியது கண்டனத்துக்குரியது என்றுமறைமுகமாக நெடுமாறனைக் குறிப்பிட்டார். கிருஷ்ணாவையும்,நெடுமாறனிடமிருந்து விலகியே இருக்குமாறு அவர் அறிவுறுத்தியதாகவும்தெரிகிறது.
இதற்கிடையே, ராஜ்குமார் விவகாரம் தொடர்பாக தமிழக அரசுடன் தொடர்புவைத்திருந்தால் மட்டும் போதும் என்று பெங்களூரில் செவ்வாய்க்கிழமைநடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் யோசனை தெரிவிக்கப்பட்டதாகவும்தெரிகிறது.
எனவே, ராஜ்குமார் விடுதலை தொடர்பான எந்தத் தகவல்தேவைப்பட்டாலும், அதை தமிழக அரசிடமிருந்து கர்நாடகம் பெறும் என்றம்நெடுமாறனிடம் நேரடித் தொடர்பு கொள்வதை கர்நாடக அரசு தவிர்க்கும்என்றும் கர்நாடகத் தரப்பில் கூறப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications