காங். கோஷ்டிப் பூசல் .. மயங்கி விழுந்தார் பார்வையாளர்
சென்னை:
தமிழக காங்கிரஸ் அமைப்புத் தேர்தல் குறித்து ஆலோசிக்க சென்னை வந்த மேலிடபார்வையாளர் சங்கரநாராயணன் மூச்சுத் திணறி மயங்கி விழுந்தார்.
சிகிக்சைக்காக அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதால் ஆலோசனைக் கூட்டம்பாதியிலேயே முடிந்தது.
தமிழக காங்கிரஸ் உட்கட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 11-ம்தேதி தலைவர் பதவிக்கான தேர்தல் நடத்தப்பட வேண்டும். தலைவர் பதவியை பிடிக்கஇளங்கோவனுக்கும், தங்கபாலுவுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.
மாவட்ட நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதிலும் இந்த இரு தலைவர்களின் கோஷ்டிகள்மோதத் துவங்கியுள்ளன. இதனால் சுமூகமாக தேர்தலை நடத்துவது குறித்துஆலோசிப்பதற்காக கட்சியின் மேலிடப் பார்வையாளர் சங்கர நாராயணன் அவசரஅவசரமாக சென்னை வந்தார்.
சென்னையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இரு தரப்பினரையும் அழைத்துஆலோசனைக் கூட்டம் நடத்தினார். அதில் மோதல் ஏற்பட்டது. இதையடுத்துகூட்டத்தை மாலை வேறு இடத்திற்கு மாற்றினர். அதன்படி மாலையில் நடந்தகூட்டத்தில் இளங்கோவன், தங்கபாலு, பிரபு, தண்டாயுதபாணி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
இளங்கோவன், தங்கபாலு, பிரபு ஆதரவாளர்கள் பிரச்னையை கிளப்பினர்.கோஷ்டிகள் ஆளாளுக்கு பேச கூட்டம் காரசாரமாக மாறியது. அமைதிப்படுத்தமுடியாமல் திணறிய சங்கரநாராயணனுக்கு கடைசியில் மூச்சுத் திணறல் ஏற்பட்டுமயங்கி விழுந்தார். அவரது மூக்கில் இருந்து ரத்தம் வடிந்தது.
உடனடியாக அவர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்குதீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
-
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்!












Click it and Unblock the Notifications