வாழப்பாடி புகார்: சி.பி.ஐ. விசாரணை கோருகிறது த.மா.கா.
சென்னை:
எம்.பி. சீட்டுக்கள் பெற ராமதாசுக்கு வாழப்பாடி ராமமூர்த்தி லஞ்சம் கொடுத்ததுதொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ்வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்த விஷயம் தொடர்பாக த.ம.ா.கா. மாநில நிர்வாகிகள் கூட்டாக வெளியிடுள்ளஅறிக்கையின் விவரம் வருமாறு:
சில தினங்களுக்கு முன் பத்திரிக்கையாளர்களை சந்தித்த வாழப்பாடி ராமமூர்த்தி,பாரதிய ஜனதா கூட்டணியில் கடந்த லோக்சபா தேர்தலில் போட்டியிட தனது கட்சிக்குமூன்று இடங்கள் பெற்றுத்தர டாக்டர் ராமதாசுக்கு 2.5 கோடி லஞ்சம் தந்ததாககூறியிருந்தார். அதை திரும்பப் பெற அவரோடு சமாதானமாக போகமுடிவெடுத்திருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்த குற்றச்சாட்டுக்கு சரியான பதிலேதும் தராமல் மழுப்பி வருகிறார். சாதாரணகுடும்பத்தில் பிறந்து அரசியல் வாழ்வில் முன்னேறியவன் என கூறி வரும் வாழப்பாடிராமமூர்த்தியிடம் எப்படி அவ்வளவு பணம் வந்தது என்பது தெரியவில்லை.
இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இந்தவிசாரணைக்கு பா.ஜ.க. தலைமையும், முதல்வர் கருணாநிதியும் ஏற்பாடு செய்யவேண்டும்.. ராமதாசிடம் லஞ்சப் பணத்தை பறிமுதல் செய்து சமீபகாலத்தில் ஏற்பட்டகலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்க வேண்டும் என அந்த அறிக்கையில்கேட்டுக் கொண்டுள்ளனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications