லாவோஸ் விமான விபத்து: உயிர் தப்பிய 4 பேரும் தமிழர்கள்
பாங்காக்:
தாய்லாந்து அருகே உள்ள லாவோஸ் நாட்டில் நடந்த விமான விபத்தில் உயிர் தப்பிய 4 பேரும் தஞ்சாவூரைச்சேர்ந்த தமிழர்கள் என்று தெரியவந்துள்ளது.
வியாழக்கிழமை லாவோஸ் நாட்டின் மலைப் பகுதியில் இந்த விமான் மோதி வெடித்துச் சிதறியது. இதில்விமானத்தில் இருந்த 15 பேரில் 7 பேர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.
பைலட், உதவி பைலட் உள்பட 8 பேர் உயிர் தப்பினர். இதில் 4 பேர் தமிழர்கள். தஞ்சாவூரைச் சேர்ந்த இவர்கள்சிங்கப்பூரில் குடியுரிமைப் பெற்று வாழ்ந்து வருகின்றனர்.
இவர்களின் பெயர் விவரம்: மாரிமுத்து பாலசுப்பிரமணியம், அப்துல் ரகுமான் புகாரி, லட்சுமணன் ராமதாஸ்,முத்தையாபதி சேகர். நான்கு பேரும் கட்டுமானத் தொழிலாளர்கள். சிங்கப்பூரைச் சேர்ந்த க்வாங் புங் செங் என்றகட்டுமான நிறுவனத்தில் பணி புரியும் இவர்களை அந்த நிறுவனம் தான் லாவோசுக்கு அனுப்பியது.
லாவோசில் சாலை அமைப்புப் பணியில் ஈடுபடுவதற்காக இவர்கள் சென்று கொண்டிருந்தனர்.
இவர்கள் பயணம் செய்த அந்த ஒய்-12 என்ற சிறிய விமானம் சீனாவில் தயாரிக்கப்பட்டது. மோசமான வானிலைகாரணமாக வழிதவறி மலையில் மோதியது. இவர்களுடன் பயணம் செய்த சிங்கப்பூர் நிறுவனத்தின் ஏஜெண்ட்விபத்தில் பலியாகிவிட்டார்.
உயிர் தப்பிய நான்கு இந்தியர்களுக்கும் முதுகுத் தண்டில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உள் காயங்களும்ஏற்பட்டுள்ளன. இவர்களின் உயிருக்கு ஆபத்து ஏதுமில்லை. இப்போது லாவோஸ் தலைநகர் வியன்டியானில்மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இவர்கள விரைவில் சிங்கப்பூர் அல்லது தாய்லாந்துக்கு கொண்டுசெல்லப்படுவர். அங்கு உரிய சிகிச்சை அளிக்கப்படும் என லாவோசில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்தது.
இவர்களுக்கு இந்தியத் தூதரகம் அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது.
விபத்து நடந்த இடம் அடர்ந்த காடுகள் அடங்கிய மலைப் பகுதி என்பதால் உதவி செய்ய அங்கு யாரும் இல்லை.நொருங்கிய விமானத்திலிருந்து உயிர் தப்பி வெளியே வந்த இவர்கள் முழு இரவையும் காட்டுப் பகுதியில் தான்கழித்தனர். பலத்த காயங்களுடன் அரை மயக்கத்தில் அவர்கள் முழு இரவும் அங்கேயே இருந்தனர்.
விமானியும் துணை விமானியும் அங்கிருந்து நடந்தே சென்று வெகுதூரத்தில் இருந்த கிராமத்தை அடைந்துநிலைமையை விளக்கிய பின்னர் தான் மீட்புக் குழுவினர் ஹெலிகாப்டரில் சம்பவ இடத்தை அடைந்தனர். பின்னர்இவர்களை ஹெலிகாப்டரிலேயே மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
சிறிய நாடான லாவோசில் பல இந்திய, தாய்லாந்து, சீன நிறுவனங்கள் அணைகள், சாலைகள் அமைக்கும் பணியில்ஈடுபட்டுள்ளன. பல இந்தியப் பொறியாளர்கள் இங்கு பணியாற்றி வருகின்றனர். கட்டுமானத் தொழிலாளர்களில்பெரும்பாலானவர்கள் வியட்நாம், லாவோஸ், சீனாவைச் சேர்ந்தவர்கள்.
லாவோஸ் விமானத்துறையிடம் சீனாவிலும் ரஷ்யாவிலும் கட்டப்பட்ட பழைய விமானங்கள் தான் உள்ளன. கடந்தசில ஆண்டுகளில் இந் நாட்டு விமானங்கள் பல விபத்துகளை சந்தித்துள்ளன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications