ஹைதராபாத்தில் விஷ வாயுக் கசிவு: உயிருக்கு பயந்து மக்கள் தப்பி ஓட்டம்
ஹைதராபாத்:
ஹைதராபாத்தில் வெள்ளிக்கிழமை விஷ வாயு கசிவு ஏற்பட்டதையடுத்து அங்குபெரும் பதற்றமும் பரபரப்பும் நிலவியது.
பாலாநகர் - ஜேடிமெல்டா பகுதியிலுள்ள ஆலைகளில் இருந்து இந்த விஷ வாயுகசிந்திருக்கலாம் என்று தெரிகிறது.
இந்த வாயுவை சுவாசித்தவர்களுக்கு வாந்தியும், கண் எரிச்சலும், மூச்சடைப்பும்,தலைவலியும் ஏற்பட்டது. இதையடுத்து உயிருக்கு அஞ்சி மக்கள் அருகில் உள்ளபேகம்பேட், கிரீன்லேண்ட்ஸ், அமீர்பேட், சஞ்சீவரெட்டி நகர் மற்றும் பல ஊர்களில்தஞ்சம் புகுந்துள்ளனர்.
போலீசாரும், ஆந்திர சுற்றுப்புறச்சூழல் கட்டுப்பாடு அதிகாரிகளும் எந்தஇடத்திலிருந்தி வாயு லீக் ஆகியிருக்கக்கூடும் என்பது குறித்து தீவிரமாக சோதனைநடத்தி வருகின்றனர்.
அவர்கள் வாயுவை திரவ நிலையில் எடுத்துச் சென்ற லாரி கிரீன்லாண்ட்ஸ் பகுதியைக்கடந்து செல்லும் போது அதிலிருந்து வாயுவே அல்லது திரவமோசிந்தியிருக்கக்கூடும்என சந்தேகிக்கின்றனர். சிந்திய திரவத்தின் தடத்தைப் பின்பற்றிஅந்த வாகனம் சென்ற இடத்தை கண்டுபிடிக்க முயன்று வருகிறார்கள்.
இந்த வாயு வெளிப்பாடு எந்த ஆலையிலிருந்தும் வரவில்லை என சுற்றுப்புறச் சூழல்கட்டுப்பாடுத் துறையின் செயலாளர் திஷியா சேட்டர்ஜி தெரிவித்தார். ஏனென்றால்பாலாநகர்-ஜேடிமெல்டா மற்றும் சனாத்நகரில் வாழும் மக்கள் எந்த விதமானபாதிப்பும் அடைந்திருப்பதாகத் தெரியவில்லை.
மருத்துவர்கள் அந்த வாயுவின் பாதிப்பு காற்றில் கலந்திருக்கும் வரைதான்பிரிச்னைகள் இருக்கும். அது கலைந்து விட்டால் எந்த விதமான பாதிப்பும் இருக்காதுஎன சொன்னதும் மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.
சுற்றுப்புறச் சூழல் கட்டுப்பாட்டு அதிகாரிகள் வெளிப்பட்ட வாயு ஃபார்மாடிஹைடாகஇருக்கலாம் என சந்தேகிக்கின்றனர். கிடைத்த திரவ தடத்தை வைத்து வாயு என்னவகையைச் சேர்ந்தது என்பதை கண்டு பிடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications