இலங்கை: புலிகள் தாக்கி ஹெலிகாப்டர், கப்பல்கள் தகர்ப்பு - 40 வீரர்கள் காயம்
கொழும்பு:
இலங்கை விமானப் படையின் எம்.ஐ.-24 ரக ஹெலிகாப்டரை விடுதலைப் புலிகள்ஏவுகணை மூலம் தாக்கி வீழ்த்தினர். இதேபோல, விடுதலைப் புலிகளின் கடற் பிரிவுபுலிகள், இரண்டு கடற்படை படகுகளையும் தாக்கி சேதப்படுத்தினர்.
இலங்கை ராணுவ செய்தித்தொடர்பாளர் கருணாரத்னே இதுகுறித்துக் கூறுகையில்,திரிகோணமலை துறைமுகத்தில் விடுதலைப் புலிகள் அதிகாலை திடீர் தாக்குதலைமேற்கொண்டனர். ஆர்ட்டில்லரிகளாலும், மார்ட்டர்களாலும் கடுமையாகத் தாக்கினர்.
காலை 5.30 மணியளவில், கடற் புலிகள் பிரிவின் 4 புலிகள், வெடிகுண்டுகள் நிரப்பிய3 படகுகளில் துறைமுகத்திற்குள் வந்தனர். அவர்களைப் பார்த்த கடற்படை வீரர்கள்தாக்குதல் நடத்தினர். இதில் விடுதலைப் புலிகளின் மூன்று படகுகள் சேதமடைந்தன.ஒரு படகு தப்பி விட்டது.
தப்பிய படகு துறைமுகத்தில் நின்று கொண்டிருந்த கடற்படை வீரர்களை ஏற்றிச்செல்லும் படகு மற்றும் துப்பாக்கிகள் பொருத்தப்பட்ட படகுக்கு அருகே சென்றுமோதியது. இதில் இரு படகுகளும் சேதமடைந்தன. படகில் இருந்த 40 வீரர்கள்காயமடைந்தனர்.
இந்த மோதலில் கடற்படையின் இரண்டு மாலுமிகள் கொல்லப்பட்டனர். 3 பேர்காயமடைந்தனர். 1 மணி நேரத்திற்கும் மேல் இந்த மோதல் நீடித்தது. திரிகோணமலைதுறைமுகம் முழுவதும் விடுதலைப் புலிகள் பயங்கரமாக தாக்குதல் நடத்தினர்.அவர்களது குண்டுவீச்சினால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து இனனும் மதிப்படவில்லை.
இந்த சண்டை காரணமாக முட்டூர்-திரிகோணமலை இடையிலான பயணிகள் படகுப்போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. துறைமுகத்திற்குள் பொது மக்கள் வரவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, கிலாலி பகுதியிலும் விடுதலைப் புலிகள் தாக்குதல் மேற்கொண்டனர்.அங்குள்ள சிறிய துறைமுகப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கப்பலைத் தாக்கமுயற்சித்தனர். ஆனால் இந்தத் தாக்குதலை இலங்கை கடற்படை வீரர்கள்முறியடித்தனர் என்றார் கருணரத்னே.
ஹெலிகாப்டரை வீழ்த்தினர்:
கடற்படை படகுகளை தகர்த்த சில மணி நேரத்தில் விமானப்படையின்ஹெலிகாப்டரை விடுதலைப் புலிகள் சுட்டு வீழ்த்தினர்.
திங்கள்கிழமை அதிகாலை பணியில் ஈடுபடுத்தப்பட்ட விமானப் படை ஹெலிகாப்டர்காணவில்லை. அனேகமாக அது விடுதலைப் புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம்என்று சந்தேகிப்பதாக ராணுவச் செய்தியாளர் கருணரத்னே கூறினார்.
திரிகோணமலை துறைமுகத்தில் நடந்த தாக்குதலின்போது கடற்படைக்குஉதவுவதற்காக விமானப் படை ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டது. அப்போதுஉபாலி என்ற இடத்தில் ஹெலிகாப்டர் காணாமல் போனது.
உபாலி அருகே ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தெரிகிறது. கடந்த நான்குநாட்களில் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ள இரண்டாவது விமானப்படை ஹெலிகாப்டர் இதுஎன்பது குறிப்பிடத்தக்கது.
அக்டோபர் 19-ம் தேதி நாகர்கோவில் அருகே விமானப்படையின் எம்.ஐ-24 ரகஹெலிகாப்டரை விடுதலைப் புலிகள் சுட்டு வீழ்த்தினர். நாகர்கோவிலில் இரண்டுநாட்கள் நடந்த மோதலில் ஏராளமான புலிகளும், ராணுவ வீரர்களும் இறந்தனர்என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கைக் கடற்படை வீரர்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த துறைமுகம்திரிகோணமலை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது நடந்துள்ள தாக்குதல் மூலம்திரிகோணமலை துறைமுகம் மூடப்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
திரிகோணமலை தவிர, நாகர்கோவில் பகுதியிலும் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவவீரர்களுக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. இலங்கை பாதுகாப்புப்படையினரின் பாதுகாப்பு வளையங்களைத் தாண்டி விடுதலைப் புலிகள் தாக்குதலில்ஈடுபடுவதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.
கடந்த வியாழக்கிழமை முதல் நடந்து வரும் தாக்குதல்களில் இதுவரை 80 விடுதலைப்புலிகள் இறந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இலங்கைத் தரப்பில் 17 பேர்கொல்லப்பட்டதாக, 104 வீரர்கள் காயமடைந்ததாகவும் அரசுத் தரப்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன்












Click it and Unblock the Notifications