உ.பி.யில் கொடூரம்: தலித்கள் மீது ஆசிட் வீச்சு - 2 பேர் கண் பறிப்பு
லக்னோ:
உத்தரப் பிரதேசத்தில் தலித்துகள் மீது உயர் சாதியினர் ஆசிட் வீசி தாக்குதல் நடத்தினர்.இதில் 2 பேருக்கு கண் பார்வை போனது.
இது பற்றி கூறப்படுவதாவது:
உ.பி. பாராபாங்கி மாவட்டத்தில் உள்ளது மாதெய்லா கிராமம். இக் கிராமம் மாநிலத்தலைநகர் லக்னோவிலிருந்து 30 கிலோமீட்டர் தூரத்தில்தான் உள்ளது.
மாதெய்லா கிராமத்தில் உள்ள குளத்தில் மீன்பிடிப்பது தொடர்பாக அக் கிராமத்தில்வசிக்கும் உயர் சாதியினருக்கும், தலித்துகளுக்கும் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது.
இந் நிலையில், சில நாட்களுக்கு முன் ஏற்பட்ட தகராறின்போது 6 தலித்துகளை உயர்சாதியினர் கட்டிவைத்து பலமாக அடித்துள்ளனர். பின்னர் அவர்களது முகத்தில்ஆசிட்டை வீசி விட்டுச் சென்றுவிட்டனர்.
இந்த ஆசிட் வீச்சில் இரு தலித்துகளின் கண் பார்வை முற்றிலுமாக பறிபோய்விட்டது.சிகிச்சைக்காக 6 தலித்துகளும் மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டபோதுதான் இச்சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.
மாதெய்லா குளத்தில் மீன்பிடிக்கும் உரிமை 3 தலித்துக்களுக்கு வழங்கப்பட்டது.அவர்கள் கூலி ஆட்களை வைத்து குளத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த உயர் சாதியினர், மீன் பிடித்துக் கொண்டிருந்த தலித்துகளைகம்பால் அடித்து காயப்படுத்தியுள்ளனர். பின்னர் அவர்கள் முகத்தில் ஆசிட்டைஊற்றிச் சென்றுவிட்டனர் என்று போலீஸார் தெரிவித்தனர்.
எங்களை உயர் சாதியினர் தாக்கியது குறித்து பலமுறை புகார் கொடுத்தும் போலீஸார்எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடைசியாக எங்கள் முகத்தில் ஆசிட் வீசப்பட்டபிறகும் நாங்கள் போலீஸ் நிலையம் சென்று புகார் கொடுத்தோம். ஆனால், அதைவாங்க போலீஸார் மறுத்துவிட்டனர் என்று பாதிக்கப்பட்ட ஒரு தலித் தெரிவித்தார்.
போலீஸாரும், தலித்துகள் முகத்தில் ஆசிட் வீசிய உயர் சாதியினர் மீது இன்னும்வழக்கோ, நடவடிக்கையோ எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், இச் சம்பவம் குறித்து உடனடியாக விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்கும்படிபாராபாங்கி மாவட்ட போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளதாக மாநில போலீஸ் தலைவர்எம்.சி. திவேதி தெரிவித்தார்.
இச் சம்பவம் ஒரு அதிர்ச்சியளிக்கக்கூடிய சம்பவம்தான். பாராபாங்கி மாவட்டநிர்வாகத்திடமிருந்து இச் சம்பவம் குறித்து எந்த தகவலும் வராத பட்சத்தில் வேறுஎதுவும் கூற முடியாது என்றார் அவர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications