1000 ரூபாய்க்காக அடுத்தவருக்கு பரீட்சை எழுத வந்தவர்
பெரியகுளம்:
ரூ. 1000 லஞ்சம் வாங்கிக் கொண்டு அடுத்தவருக்காக பரீட்சை எழுத வந்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.
அவரை "செட்டப் செய்து அனுப்பி வைத்த டுட்டோரியல் கல்லூரி ஆசிரியரை போலீசார் தேடி வருகின்றனர்.
தேனி மாவட்டம் வாழையாத்துப்பட்டியைச் சேர்ந்த மாணவர் சதீஷ். இவர் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தோல்விஅடைந்து விட்டார். அதனால் அக்டோபர் மாத தேர்வு எழுதுவதற்காக டுட்டோரியலில் சேர்ந்து படித்து வந்தார்.ஆனால், அவரது "தலையில் எதுவும் ஏறவில்லை.
இந்நிலையில் அக்டோபர் தேர்வு தொடங்கியது. பெரியகுளம் அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் தேர்வுநடந்து வருகிறது. இத்தேர்வில் மாணவர் சதீசுக்கு பதிலாக செந்தில்குமார் (18) என்ற இளைஞர் பரீட்சை எழுதவந்தார்.
சரியான நேரத்திற்கு வராமல் 10 நிமிடம் தாமதமாக வந்ததால் அவரை ஆசிரியர்கள் விசாரித்தனர். அப்போதுஅவர் முரணான பதிலளித்ததால் சந்தேகம் கொண்டனர்.
தேர்வு எழுத அனுமதிக்க மறுத்ததோடு அந்த இளைஞரை தனியாக அழைத்து விசாரித்தபோது உண்மைவெளியானது.
சதீசுக்கு பதிலாக ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுத வந்தது தெரிந்தது. சின்னமனூரில் உள்ள டுட்டோரியல்ஆசிரியர் தேவராஜ், போலியாக ஹால் டிக்கெட் தயார் செய்து கொடுத்து, ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்துசெந்தில்குமாரை அனுப்பி வைத்துள்ளார்.
இதுகுறித்து போலீசில் புகார் கூறப்பட்டது. அதன்பேரில் இளைஞர் செந்தில்குமார் கைது செய்யபட்டார்.இதற்கெல்லாம் காரணமாக டுட்டோரியல் ஆசிரியர் தேவராஜ், மாணவர் சதீஷ் ஆகியோர் தலைமறைவாகிவிட்டனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications