தீபாவளியும், தேவர் ஜெயந்தியும் .. பரபரப்பில் மதுரை
மதுரை:
தீபாவளி மற்றும் தேவர் ஜெயந்தி ஆகியவை அடுத்தடுத்து வருவதால் மதுரை மற்றும்ராமநாதபுரம் மாவட்டங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மதுரையில் தேவர் ஜெயந்தி நிகழ்ச்சியின்போது எப்போதுமே பரபரப்புக்கு பஞ்சம்இருக்காது. பல்வேறு தேவர் சமூக பிரிவின் ஊர்வலம் நடத்துவார்கள். முக்கியநிகழ்ச்சியாக அக்டோபர் 30-ம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில்தேவர் குரு பூஜை நடக்கும்.
தேவர் குரு பூஜை நிகழ்ச்சியில் தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள்கலந்து கொள்வது தற்போது வழக்கமாகியுள்ளது. இம்முறை கலந்து கொள்ளும்முக்கியத் தலைவர்களில் ஒருவர் ஜெயலலிதா.
இதற்கிடையே தீபாவளியும் வருவதால், மதுரையும், ராமநாதபுரமும் பரபரப்பில்உள்ளது. மதுரை நகரில் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நகரபோலீஸ் கமிஷனர் சுப்ரமணியன் இதுகுறித்துக் கூறுகையில், நகர் முழுவதும் 2500போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுதவிர அதிரடிப் படைபோலீஸாரும் பாதுகாப்புப் பணியில் உள்ளனர்.
முக்கிய இடங்களில் போலீஸ் படை நிறுத்தப்பட்டுள்ளது. நகரில் புதன்கிழமை முதல்ஒரு வார காலத்திற்கு இரவு ரோந்து அதிகரிக்கப்பட்டுள்ளது.
அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் நான்கு பிரிவினருக்கு அக்டோபர் 30-ம்தேதி ஊர்வலம் நடத்த அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் செல்ல வேண்டியஊர்வலப் பாதையும் வகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
இதற்கிடையே, தென் மாவட்டங்களில் தேவர் ஜெயந்தி நிகழ்ச்சிகளுக்குசெய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்பார்வையிடுவதற்காக கூடுதல்டி.ஜி.பி. குமாரசாமி புதன்கிழமை மதுரை வருகிறார்.
இதற்கிடையே, தேவர் குரு பூஜை நிகழ்ச்சியை அமைதியான முறையில் நடத்தி முடிக்கஅனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று மதுரை மாவட்ட கலெக்டர் தங்கவேலுகோரிக்கை விடுத்துள்ளார்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications