தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் தொடருக்கு இந்திய நடுவர்
ஜோகன்னஸ்பர்க்:
தென் ஆப்பிரிக்காவுக்கும், நியூசிலாந்துக்கும் இடையே நடைபெற உள்ள கிரிக்கெட்போட்டித் தொடருக்கான ஐ.சி.சி.அம்பயர்கள் மற்றும் ரெஃபரிகள்நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் ஒரு இந்திய அம்பயரும் அடங்குவார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதுஐ.சி.சி. அம்பயராக உள்ள எஸ்.வெங்கட்ராகவன் ஒருவர்தான் இந்தியாவைச்சேர்ந்தவர்.
இப்போது தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து போட்டித் தொடரில் ஐ.சி.சி. அம்பயராகஇந்தியாவின் ஜெயப்பிரகாஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.
அக்டோபர் 27-ம் தேதி முதல் நவம்பர் 4-ம் தேதி வரை இரு நாடுகளுக்கும் இடையே6 சர்வதேச ஒருநாள் போட்டிகள் நடைபெற உள்ளன. அதற்குப் பிறகு டெஸ்ட்போட்டிகள் நடைபெற உள்ளன.
இந்த ஒருநாள் போட்டித் தொடர் மற்றும் டெஸ்ட் போட்டித் தொடருக்கானரெஃபரிகளையும், அம்பயர்களையும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.)நியமித்துள்ளது.
ஒரு நாள் போட்டித் தொடர் முழுவதுக்குமான ரெஃபரியாக பாகிஸ்தான் முன்னாள்டெஸ்ட் வீரர் தாலத் அலி நியமிக்கப்பட்டுள்ளார். டெஸ்ட் போட்டித் தொடருக்கானரெஃபரியாக பாகிஸ்தானின் நவுஷத் அலி நியமிக்கப்பட்டுள்ளார்.
டெஸ்ட் போட்டிகளுக்கான அம்பயர்களாக இந்தியாவின் ஜெயப்பிரகாஷ்,ஜிம்பாப்வேயின் இயான் ராபின்சன், இங்கிலாந்தின் ஜார்ஜ் ஷார்ப் ஆகியோர்நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications